ஆரியர்களின் பூர்வீக இடம்
(ORIGIN OF ARYANS)
ஆரியர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்களின் பூர்வீக இடம் யாது? போன்ற கேள்விகளுக்கான திட்டமான பதில்கள் இதுவரை வரையறுக்கப்படவில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் ஆரியர்களின் பூர்வீக இடம் குறித்து பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவர்களின் கருத்துக்களை விரிவாகக் காணலாம். ஆனால் எந்தவிதமான இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை .
1. ஆரியர்களின் பூர்வீக இடம் மத்திய ஆசியா:
பேராசிரியர் மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் ஆரியர்களின் பூர்வீக இடம் மத்திய ஆசியா என்று கருதுகிறார்கள். மாக்ஸ் முல்லர் மொழியின் அடிப்படையில் ஆராய்ந்து இவ்வாறு கூறுகிறார். வேதங். உபயோகிக்கப்பட்ட மொழிக்கும், ஈரானிலுள்ள பாரசீக வேதா ''சென்ட் அவஸ்தா'வில் உபயோகிக்கப்பட்ட மொழிக்கும் .. ஒற்றுமை காணப்படுவதால் ஆரியர்களின் பூர்வீக இடம் ஈரானுக்கு இந்தியாவுக்கும் மத்தியில் இருந்திருக்கலாம். அந்த இடம் மத்தி.. ஆசியாவாக இருக்கலாம் என்பது கருத்து.
மேலும் பாரசீக வேதமான சென்ட் அவஸ்தாவில் ஆதிமனிதன் 'ஆரியனா', 'வோஜா' என்ற இடங்களில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. அந்த இடமும், இன்னும் வேதத்தில் கூறப்பட்டுள்ள மற்றும் சி. இடங்களும் மத்திய ஆசியாவில் காணப்படுவதால் ஆதி ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்திருக்கக்கூடும்.
பாபிலோனியாவிலுள்ள ஒரு கல்வெட்டு மூலமாக பாபிலோனுக்கு கிழக்கு திசையிலிருந்து குதிரைகள் அந்நாட்டு மக்களில் உபயோகத்திற்கு வந்ததாக நாம் அறிய முடிகிறது. கிழக்கு என்பது ஈரான் அல்லது மத்திய ஆசியாவைக் குறிக்கலாம். ஆரியர்கள் குதிரையின் உபயோகத்தை நன்கு அறிந்தவர்கள். மேற்கூறிய காரணங்களாலும் மேலும் சில காரணங்களாலும் ஆரியர்களின் பூர்வீக இடம் மத்திய ஆசியாவாக இருக்கலாம்.
2. ஆரியர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களே!
மக்டனால் போன்ற ஆசிரியர்கள் ஆரியர்களின் பூர்வீக இடம் ஐரோப்பா என்று கருதுகிறார்கள். ஒட்டகம், புலி, யானை, கழுதை, ஆனால் போன்ற ஆசிய மிருகங்களைப் பற்றி ஆரியர்கள் அறியவில்லை ஐரோப்பாவில் காணப்படும் ஓக், வில்லோ , பீச் போன்ற மரங்களைப் பற்றி தெரிந்துள்ளனர். எனவே இவர்களது பூர்வீக இடம் ஐரோப்பாவாகவும் இருக்கலாம்.
3. வடதுருவப் பகுதியிலிருந்து வந்தவர்கள்:
ஆர்யர்களின் பூர்வீக இடம் ஆர்க்டிக் பகுதியே (வட துருவம்) என்பது பாலகங்காதர திலகரின் கருத்து. இவர் தனது 'ஆரியர்களின் ஆர்க்டிக் உறைவிடம்' என்ற புத்தகத்தில் இக்கருத்தைக் கூறுகிறார். பூமியானது காலம் செல்ல செல்ல தனது உஷ்ணத்தை இழக்கிறது. ஆரியர்கள் வடதுருவத்தில் வாழ்ந்த போது மனிதன் வாழக்கூடிய வெப்பம் உடையதாகவும் செழிப்பாகவும் இருந்தது. பின் தட்ப வெப்ப நிலை மாறியதால் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். வேதங்களிலும் சென்ட் அவஸ்தாவிலும் நீண்ட கால இரவைப் பற்றியும் பகலைப் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆகவே ஆரியர்கள் ஒரு காலத்தில் நீண்ட இரவு பகலைக் கொண்ட பிரதேசமாகிய வடதுருவத்தில் வாழ்ந்திருப்ப என்று கூறப்படுகிறது.
4. ஆரியர்களின் ஆதி இடம் பஞ்சாப் :
'வங்க வரலாற்று ஆசிரியர் ஏ.சி. தாஸ் போன்றவர்கள் ஆரியர்களின் ஆதி இடம் 'சப்த சிந்து' என்று சொல்லப்படுகின்ற பஞ்சாப் என்று கருதுகிறார்கள். ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள நில அமைப்பும் நில வரலாறும் 'சப்த சிந்து' என்ற பிரதேசத்தில் காணப்படும் நில அமைப்பும் நில வரலாறும் ஒன்று பட்டு காணப்படுகிறது. ஆனால் இக்கருத்தை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.
5. ஆரியர்களின் பூர்வீக இடம் திபெத் பீடபூமி :
சுவாமி தயானந்த சரஸ்வதியும் மற்றும் சிலரும் ஆரியர்கள் முதன் முதலாக திபெத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் ஆரியர்கள் நெல், அரிசி, புலி, யானை முதலியவைகளை நன்கு அறிந்தவர்கள் என்று கூறமுடியாது. மேலும் அவர்கள் செழிப்பான இந்தியாவதை விட்டு ஏன் பிற நாடுகளுக்குப் பரவினர் என்பதும் வியப்பாக உள்ளது. ஆகவே இந்தியா ஆரியர்களின் பூர்வீக இடம் என்பதை பூரணமாக ஏற்றுக் கொள்ள இயலாது.
6. மேற்கு பால்டிக் கடற்கரை:
ஆரியர்கள் மேற்கு பால்டிக் கடற்கரையில் வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. புதிய கற்காலத்திற்குப் பின்பு மேற்கு பால்டிக் கடற்கரையில் கல்லினால் திறம்படவும் அழகாகவும் செய்யப்பட்ட ஆயுதங்கள். பெருமளவு கிடைக்கப் பெற்றுள்ளதால் ஒரு வேளை மேற்கு பால்டிக் கடற்கரை ஆரியர்களின் ஆதி இடமாக இருந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
7. ஆஸ்திரியா-ஹங்கேரி:
சில ஆரியர்கள் ஆரியர்களின் பூர்வீக இருப்பிடம் ஆஸ்திரியா ஹங்கேரி சமவெளியாக இருக்கக்கூடும் என்று கருதுகிறார்கள். அவர்கள் அங்கிருந்து இந்தியாவுக்குக் குடியேறி இந்தோ-ஆரியர்கள் என்று அழைக்கப்பட்டனர் என்றும் கூறுவர்.
8. ஜெர்மனி:
ஜெர்மன் ஆசிரியர்கள் ஆரியர்களின் பூர்வீக இருப்பிடம் ஜெர்மனி என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்து பலரால் மறுக்கப்படுகிறது.
9. தெற்கு ரஷ்யா, மேற்கு சைபீரியா, ஆசியாமைனர்:
ஷ்ரோதர் என்ற ஆசிரியர், ஆரியர்களின் பூர்வீக இடம் தெற்கு ரஷ்யாதான் என்ற கருத்தை வலியுறுத்துகிறார். மேலும் சிலர், ஆரியர்கள் தோன்றிய இடம் மேற்கு சைபீரியா என்றும் ஆசியாமைனர் என்றும் கருதுகிறார்கள்.இவ்வாறு ஆரியர்களின் பூர்வீக இடம் பற்றி பல்வே கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவர்களது உண்மையான தோற்றம் இதுவரை யாரும் திட்டமாகக் கூறவில்லை . இது பற்றிய விவாதங்கள. முடிவே இல்லை என்று கூறலாம்.
ஆரியர்களின் இந்திய படையெடுப்பு:
இந்தியாவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நாகரிகத்தை அளித்த ஆரியர்கள், இந்தியாவின் மீது படையெடுத்தனர் என்று ஒரு சாராரும், அவ்விதப் படையெடுப்பு நடந்திருக்காது என்று மறு சாராரும் கூறுகின்றனர். ஆரியர்கள் இந்தியாவின் மீது
படையெடுத்தார்கள் என்பதற்கான சான்றுகள்:
1. மொழி வல்லுநர்கள் இந்தோ - ஜெர்மானிய அல்லது இந்தோ -ஐரோப்பியர் என அழைக்கப்படும் ஆரியர்கள் ஒரே இடத்தில் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டிருத்தல் வேண்டும் என்று கருதுகிறார்கள். அந்த இடம் மத்திய ஆசியாவாக இருக்கலாம். மத்திய ஆசியாவில் வழக்கத்திலிருக்கும் தொக்கரியின் மொழிகள் இந்தோ-ஈரானிய மொழிகளுடன் கொண்டுள்ள ஒற்றுமையைவிட மிகுதியாக கிரேக்க லத்தீன் மொழிகளுடன் ஒருமைப் பட்டுள்ளது. ஆகவே மத்திய ஆசிய மொழிகள் இந்தோ ஐரோப்பிய குடும்பத்தின் இரு கிளைகளான ஐரோப்பிய ஆசிய கூட்டங்களை இணைக்கும் ஒரு பிணைப்பாகும். ஆதலால் வேத, சமஸ்கிருத மொழி பேசுவோர் வெளிநாட்டிலிருந்தே பெரும்பாலும் மத்திய ஆசியாவிலிருந்தே வந்திருக்கக் கூடும் மேலும் பலுசிஸ்தானிலிருந்த திராவிட மொழி வழக் கினி.டபில், பிராகுயி மொழி அமைந்திருப்பதும் இந்தியாவில் ஆரியர்களின் படையெடுப்புப்பினால் விளைந்திருக்கக்கூடும்.
2. சிரிய ஆசிய பகுதியில் கெப்படோசியாவில் போகஸ்காய் என்னுமிடத்தில் ஜெர்மானிய பழம் பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் கி.மு.1400க்குரிய கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளார். அவற்றில் வேதகால கடவுள்களாகிய, இந்திரன், அக்கினி, வருணன் முதலியவர்கள் குறிக்கப் பட்டுள்ளனர். எனவே ஆரியர்கள் இந்தோ -ஈரானியக் கிளையை சார்ந்தவர்கள் என்றும், ஆசியாமைனரில் கி.மு.1400க்கு முன்னரே இருந்திருக்கக்கூடும் இனவழி வந்தவர்கள் என்பதும் தெரிகிறது.
3. மேலும் ரிக் வேதத்தில் நில அமைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது சிந்து நதியின் இருபத்தைந்து கிளை நதிகள் குறிக்கப்பட்டு ஆகையினால் ஆரியர்கள் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானம், வட எல்லைப்புற மாகாணங்களில் தங்கியிருக்கக்கூடுமென அறியப்படு மேலும் ஆரியர்கள் தமது பகைவர்களை ரிக் வேதத்தில் . தாசர்கள் அல்லது)'தாஸ்யூக்கள்' என்று என்று இழிவாகக் குறிப்பிடுகின்றனர். இந்த தாஸ்யூக்கள் கக் குடிகளுடன் அவர்கள் போரிட்டு, தோற்கடித்து பின் த்தில் தங்கியதாக ரிக் வேதத்தில் சான்றுகள் உள்ளன.
மக்கள்
4. இன்று காஷ்மீர், பஞ்சாப், ராஜபுதனம் ஆகிய இடங்களில் உள்ள ,,ர்ந்த தோற்றமும், வெண்ணிற மேனியும், நீண்ட தலையையும், போன மூக்கும் உடைய இந்தோ ஆரியர்கள் போன்று எப்படுகிறார்கள். இவர்கள் திராவிட் உருவத்தினின்று முற்றிலும் வேறுபட்டவர்கள் ஆவர். சியர்கள் இந்தியாவின் மீது
படையெடுக்கவில்லை என்பதற்கான சான்றுகள்:
1. மொழியை அடிப்படையாகக் கொண்டு ஆரியப் படையெடுப்பை நிர்ணயம் செய்யமுடியாது என்று ஆரிய படையெடுப்பு பற்றிய கருத்தை எதிர்ப்போர் கூறுகிறார்கள். இந்தியாவின் மீது படையெடுத்தற்கான குறிப்பு எதுவும் ரிக் வேதத்தில் காணப்படவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
2. ஆரியரின் படையெடுப்பு ஒரு கால சம்பந்தமான படையெடுப்பாக இருந்திருக்கக்கூடுமேயன்றி, ஒரு நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்ற எண்ணத்தோடு கூடிய படையெடுப்பாக இருந்திருக்க முடியாது என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.
3. பலுசிஸ்தானத்தில் உபயோகத்திலிருக்கும் பிராகுயி மொழி, ஆரியர் இந்தியாவில் இருந்ததன் விளைவாக பலுசிஸ்தானத்தில் பரவிய மொழியாக இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
4. உடலின் புறத்தோற்றத்தின் நிலையான தன்மை பற்றிய ஐயமும் எழுகிறது. புறத்தோற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆரியப் படையெடுப்பு பற்றி தீர்மானிக்க முடியாது.
மேற்கண்டவாதங்கள் ஆரியர்களின் இந்தியப் படையெடுப்புக்கு ”ாக எழுப்பப்பட்டாலும், தாஸ்யூக்களுக்கு எதிரா ஆரியர்கள் கடும் போர் நடத்தினர் என்று இலக்கியத்தில் காணக்கிடப்பதால் இந்தியாவில் "யப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கக்கூடும் என்றே தெரிகிறது.
( ஆரியர்கள் வேளாண்மைத் தொழிலில் விருப்பமுள்ளவர்கள்.. பில், அவர்கள் முதலில் (கி.மு.1500-ல்) சிந்து சமவெளியில் குடியேறி 'கங்கை சமவெளியில் பரவினர். அவர்கள் வட இந்தியாவில் சிறிய பகுதிக்கு ''ஆரிய வர்த்தம்'' என்று பெயர்.
Comments
Post a Comment