வேதகால இலக்கியங்கள் (VEDIC LITERATURE)

வேதகால இலக்கியங்கள் (VEDIC LITERATURE)

அறிமுகம் :

                                  ஆரியர்களைப் பற்றி அறிய உதவும் ஆதாரங்கள் அவர்களுடைய இலக்கியங்களேயாகும். ஆனால் வேதகால இலக்கியங்களின் காலம் மிகவும் சர்ச்சைக்கு இடமான ஒன்று. வேதகால இலக்கியங்களின் மேல்மட்டகால எல்லை ரிக் வேதம் என்றும் கீழ்மட்ட கால எல்லை கி.மு. 600-ம் ஆண்டு என்றும் கணக்கிடப்படுகிறது. ரிக் வேதகாலம் கி.மு.2000-ம் ஆண்டு என்று கணக்கிடப்படுகிறது. 'நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள் ஆகியவை ஆக்கப்பட்ட காலம் வேதகாலமாகும்'.
                                              வேதங்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வகைப்படும். வரலாற்றைப் பொருத்தவரையில் ரிக், யஜுர், சாமம் ஆகியவை சிறப்பாகக் கருதப்படுகின்றன. அதர்வணத்தை வேதமாகவே சிலர்  கருதுவதில்லை . ரிக், யஜுர், அதர்வண வேதங்கள் வேதகால முற்பகுதியையும், சாமவேதம், பிராமணங்கள், உபநிடதங்கள் வேதகால பகுதியையும் குறிக்கும். வேதகால இலக்கியங்களைக் கீழ்கண்ட தலைப்புகளில் ஆராயலாம்.

1. ரிக்வேதம் :

வேதங்களில் மிகப் பழமையானது ரிக் வேதமாகும். வேதகால இலக்கியங்களில் மிக சிறப்பான இடத்தை வகிக்கிறது. இது ஆரியர்களின் அரசியல், சமுதாய, பொருளாதார, சமய நிலைகளைப் பற்றி அறிய. உதவுகிறது. ரிக் வேதத்தின் பாடல்கள் பெரும்பாலும் வழிபாட்டுக்காக இயற்றப்பட்டவையாகும். நீண்ட ஆயுள், செல்வம், மக்கள் பேறு முதலிய உலகியல் நலன்களைப் பெற கடவுளைப் போற்றி வழிபடும் முறையில் அவை அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் 'சூக்தம்' எனப்படும். பத்தாவது மண்டலத்திலுள்ள 'புருஷசூக்தம்' என்ற பாடலில் தான் சாதி வேற்றுமை காணப்படுகிறது.

2. சாமவேதம் :

இதில் புதிய கருத்துக்கள் மிகவும் குறைவு. அனேக பாடல் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. சாமவேதப் பாடல்கள் இசை நயத்துடன் பாடப்படுவையாகும். ஆரியர்கட்கு இசையின் மீது உள்ள விருப்பத்தைப் புலப்படுத்துவது சாம வேதமாகும். இப்பாடல்களை இசையுடன் பாடுவதற்கென்றே தனியாக இசைப்பயிற்சி பெற்ற பிராமணர்கள் இருந்தனர்.

3. யசூர் வேதம் :

வேள்விகள் செய்வதற்கான விதிமுறைகளை விளக்குவதே யசூர்) வேதமாகும். எனவேதான் இதன் பாடல்கள் வேள்விப் பாடல்கள் என்று அழைக்கப்படுகிறது. வேள்விகளில் ஓதப்படும் துதிப்பாடல்கள் இவையாகும். ஏறத்தாழ பாதிக்கு மேற்பட்ட பாடல்கள் உரை நடையிலுள்ளது. மீதி செய்யுள் வடிவில் உள்ளது.

4. அதர்வண வேதம் :

அதர்வண வேதத்தில் மந்திரம், மருந்து ஆகியவற்றைக் கையாளும் முறை கூறப்பட்டு உள்ளது. பொதுவான கருத்துக்களே அதிகம் காணப்பட்டாலும், பழைய கருத்துக்களும் நிரம்பி உள்ளன. இதன் பாடல்களில் சில புவியன்னையின் கொடைத் தன்மையையும், எல்லாம் உணர்ந்த கடவுளின் தன்மையையும் சித்தரிக்கின்றன. ஆனால் அதர்வண வேதத்தில் தெய்வீகத் தன்மையில்லையென்று பிராமணர்கள் இதனை ?" மறுக்கிறார்கள். இந்த வேதத்திலுள்ள 731 பாடல்கள் இருபது பகுதிகளா' பிரிக்கப்பட்டுள்ளன.

5. பிராமணங்கள் :

பிராமணங்கள் மற்றொரு வகையான வேத
' மற்றொரு வகையான வேத இலக்கியங்களாகும் ரிக், யசூர், சாமம், அதர்வண வேதங்களில் காணப்படும் உட்பொருள்களைக் கொண்டது பிராமணங்கள்.அதன் படியே இது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது . வேள்விச் சடங்குகள் செய்யும் முறைகளும்,வழிபடும் முறைகளையும் கூறி ,அவற்றின் விளக்கங்களையும் தருகிறது. மேலும் ஆரியர்களின் அரசியல், சமுதாய,ஏற்றத்தாழ்வு, வேதங்களை ஓதும் பூசாரிகளின் கடமைகள் ஆகியவை றியும் விளக்கிக் கூறுகிறது.

6. ஆரணியங்கள் :

ஆரணியங்கள் காடுகளில் ஆக்கப்பட்டவை. இதில் உள்ள பாடல்களை காட்டுப் பாடல்கள் என்பர். இப்பாடல்களிலுள்ள அளகளை காடுகளில் உபயோகப்படுத்த வேண்டுமென்றும் ஆகவே இவைகள் வனவாசி கட்கும், முனிவர்கட்கும், மிகுந்த பயன் அளிக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டுப் பேற்றை அடையும் எளிய வழிகள் இதில் விளக்கப்பட்டுள்ளன. ஆரணியங்கள் பிரமாணங்களின் பிற்பகுதியாகும். மொழியும், நடையும், கருத்துக்களும் கூட பிராமணங்களில் உள்ளது போன்று காணப்படுகிறது.


7. உபநிடதங்கள் :

உபநிடதங்களின் காலம் கி.மு. 800-லிருந்து 500-க்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 108 உபநிடதங்கள் உள்ளன. 'உபநிடதங்கள் ஒரு சிலருக்கு மட்டும் அறிவிக்கப்பட்ட இரகசிய தோட்பாடுகள்' எனப்படுகின்றன. உபநிடதம் என்ற தொடரிலிருந்து ''இதிலடங்கிய உண்மைகள் ஒரு மாணவன் தகுந்த குருவை தேர்ந்தெடுத்து பயபக்தியுடன் கற்றுணர வேண்டும்'' என்று கருதுவர்.
உபநிடதங்கள் ஆரணியங்களில் அடங்கியவைகளாகவோ அல்லது அவற்றிற்கான துணை செய்யுட்களாகவோ அமைகின்றன. இவை சமய தத்துவ உண்மைகளை ஆராய்ச்சி செய்து முடிவு செய்ய முயன்றோரின் கருத்துக்களை அறிவிக்கிறது. உபநிடதங்களில் ஒரு சிலவே புத்தர் காலத்திற்கு முற்பட்டவை. உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்று - நூல்களும் பிரஸ்தானத்திரயம் என அழைக்கப்படுகின்றன. பிற்காலத்தில் சங்கரரும் மாதவரும் இதற்கு உரை எழுதி உள்ளனர். ஷோபர் ஹோவர் என்பவர் உபநிடதங்களை வியந்து கூறுகிறார். 'ஈடு இணையற்ற அந்நூல்கள் மிக ஆழ்ந்த முறையில் ஆத்ம சக்தியைத் தட்டி எழுப்புகிறது. ஒவ்வொரு வாக்கியத்திலும் ஆழ்ந்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
அது என்னுடைய வாழ்க்கைக்கு அமைதி அளிக்கக்கூடியதாக இருக்கிறது' என்கிறார். அல்பரூனி என்பவர் உபநிடதங்களைப் பாராட்டி உள்ளார். ஷாஜஹானின் மூத்த மகன் தாராஷூக்கோ என்பவர் அவற்றைக் கற்று பாரசீக மொழியில் மொழி பெயர்த்துள்ளதாகவும் அறியலாம். வேதாந்த . தத்துவத்தின் வேரே உபநிடதங்கள் எனலாம்.
இவை தவிர வேதங்களும், சூத்திரங்களும், தர்ம சாத்திரங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை.. வேதங்களின் இலக்கணம் அவைகளை உச்சரிக்கும் முறை ஆகியவற்றை விளக்குவதே வேதம். வேதங்களில் வரும் பொருள்களைச் சுருக்கிக் கூறுவதே சூத்திரர் ஆரியர்கள் தங்களுக்காகவும், பிறருக்காகவும் கட்டுப்பாடான உலக வாழ்விற்காக அமைத்துக் கொண்ட சட்ட திட்டம், தர்மசாத்திரங்களாகும். இந்த சாத்திரங்கள் உலக அனுபவம் கொண்ட பெரியோர்களால் ஆக்கப்பட்டது. மனுதர்ம சாத்திரம், விஷ்ணு சாத்திரம், நாரத சாத்திரம், யஜன வால்க்கியர் சாத்திரம் ஆகியன முக்கியமானவைகள்..


வேதகால இலக்கியங்களின் சிறப்பு :

வேத கால இலக்கியங்கள் நன்கு போற்றப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளதாகவும், ஒரே காலத்தவையாகவும் உள்ளது. வேத சான்றுகள் மிகுதியாக நம்பத் தகுந்தவை. இவைகளின் பழைமை, உலக வரலாற்றில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நாகரிகம் படிப்படியாக மாறுதலடைந்த காட்சிகளையும் வேத இலக்கியத்தில் நாம் காண்கின்றோம். அவைகளில் காணப்படும் செய்திகளைக் கொண்டு, ஆரியர் இந்தியாவில் பரவியதை அறிய முடிகிறது. ஆனால் இந்த இலக்கியங்களில் தெளிவான கால விளக்க முறை காணப்படவில்லை.
※※※※※※※※


Comments