இந்தியாவின் எல்லைகளும் பரப்பும்

        இந்தியாவின் எல்லைகளும் பரப்பும் 

                      இந்தியாவின்  வட எல்லையாக  இமயமலைத்தொடர்கள் அமைந்துள்ளது .இம்மலைத் தொடர்கள் சீனாவையும் இந்தியாவையும் பிரிக்கின்றன .தீபகற்பத்தின் தெற்கில் இந்து மகாசமுத்திரமும் ,கிழக்கில் வங்கக்கடலும் , பர்மாவும் , மேற்கில் அரபிக்கடலும் ,பாகிஸ்தானும் நம் நாட்டின் எல்லைகளாக உள்ளது .


                           வடக்கே இமயமாலைத் தொடரிலிருந்து தெற்கே உள்ள இந்து மகாசமுத்திரம் வரை இந்தியாவின் நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.வடக்கு தெற்காக இதன் நீளம் 3214 கிலோமீட்டர்கள். கிழக்கு மேற்காக இதன் மிக அதிகமான அகலம் 2933 கிலோமீட்டர்கள் ஆகும்.  பரப்பில் 2.4% உள்ளடக்கியது.அனால் உலக மக்கள் தொகையில் 16% கொண்டுள்ளது. எனவேதான் மிக விசாலமான நமது நாடு ஒரு 'துணைக்கண்டம் 'என்று அழைக்கப்ப்டுகிறது.

Comments