geographical features in india இந்தியாவும் அதன் இயற்கை அமைப்பும்

                                     history of india     

    geographical features           

  (இந்தியாவும் அதன் இயற்கை அமைப்பும் 

     
                          ஒரு நாட்டின் வரலாற்றில் புவியியல் அமைப்பு குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்துகிறது .   அந்நாட்டின்  மனித இனம் ,மொழி ,தேசியம் ,வீரம் ,பண்பாடு ,ஆகியவற்றை ஆராய முற்படும்போது ,அவைகள்  புவியியல் அமைப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதை அறியலாம் .
               

                        இந்தியா  ஒரு மாபெரும் நாடு .இதனை ஒரு துணைக்கண்டம் என்கிறோம்.ஆசியாவின் தென்கோடியில் அமைந்துள்ள தீபகற்பம் தான் இந்தியா.
               ஆசிய கண்டத்தின் மூன்று தீபகற்பங்களில் நடுநாயகமாக அமைந்துள்ளது இந்தியா.    இந்த அமைப்பின் காரணமாக இந்தியாவுக்கும் பல ஆசிய நாடுகளுக்கும் வணிகத்தொடர்பும், கலைத்தொடர்பும் இருந்து வந்தன.
                எனவே இந்தியாவின் புவியியல் அமைப்பு எவ்வகையில்  அரசியல்  வரலாற்றிலும் பண்பாட்டு வளர்ச்சியிலும் பங்கு பெறுகின்றது  என்பதை அறியலாம் ........

1.இந்தியாவின் எல்லைகளும் பரப்பும் :

                                                   இந்தியாவின்  வட எல்லையாக  இமயமலைத்தொடர்கள் அமைந்துள்ளது .இம்மலைத் தொடர்கள் சீனாவையும் இந்தியாவையும் பிரிக்கின்றன .தீபகற்பத்தின் தெற்கில் இந்து மகாசமுத்திரமும் ,கிழக்கில் வங்கக்கடலும் , பர்மாவும் , மேற்கில் அரபிக்கடலும் ,பாகிஸ்தானும் நம் நாட்டின் எல்லைகளாக உள்ளது .


                           வடக்கே இமயமாலைத் தொடரிலிருந்து தெற்கே உள்ள இந்து மகாசமுத்திரம் வரை இந்தியாவின் நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.வடக்கு தெற்காக இதன் நீளம் 3214 கிலோமீட்டர்கள். கிழக்கு மேற்காக இதன் மிக அதிகமான அகலம் 2933 கிலோமீட்டர்கள் ஆகும்.  பரப்பில் 2.4% உள்ளடக்கியது.அனால் உலக மக்கள் தொகையில் 16% கொண்டுள்ளது. எனவேதான் மிக விசாலமான நமது நாடு ஒரு 'துணைக்கண்டம் 'என்று அழைக்கப்ப்டுகிறது. 
               இந்தியா மிக விசித்திரமான புவியியல் கூறுகளை அடிப்படையாக கொண்டு இந்தியாவின் இயற்கை அமைப்பை நான்கு முக்கிய இயற்கை பிரிவுகளாக பிரிக்கலாம் அவை 
               1.வடக்கே உள்ள இமயமலை தொடர் பிரதேசம் 
                2.சிந்து -கங்கை சமவெளிப்பகுதிகள் 
                 3.தக்காண பீடபூமி 
       4.தக்காண பீடபூமிக்கு கிழக்கு ,மேற்கே  உள்ள கடற்கரைச் சமவெளி 

                       1.இமயமலை தொடர்கள் பிரதேசங்கள் ;

இமயமலை தொடர்கள் இந்தியாவின் வாடா எல்லையாக உள்ளது .இதன் நீளம் கிழக்கிலிருந்து மேற்காக 2500 கிலோமீட்டர்கள் உள்ளது.
அகலம் 200 முதல் 250 கிலோமீட்டர் வரை உள்ளது.இமயமலைப் பகுதியின் மொத்தபரப்பு 5,00,000  ச .கி.மீ     ஆகும் .இமயமலை பல கணவாய்களையும் ,சிகரங்களையும் கொண்டது.இமயமலைத்  தொடரின் வமேற்கில் இந்துகுஷ் சுலைமான் மலைகளுக்கிடையே கைபர் ,போலன் ,குர்ரம் ,கோமல் முதலிய கணவர்களும் உள்ளது .

                             2.சிந்து -கங்கை சமவெளிப்பகுதிகள் 

                 சிந்து கங்கை சமவெளிப்பகுதிகள் பஞ்சாப் முதல் அஸ்ஸாம் வரை பிறந்துள்ளது .இச்சமவெளி சுமார் 2500 கிலோமீட்டர் நீளமும் 200முதல் 300கிலோமீட்டர் அகலமும் கொண்டது .இச்சமவெளியின் மேற்கே உள்ள தார் பாலைவனத்தை  தவிர மற்ற பகுதிகள் மிகுந்த செழிப்புடன் காணப்படுகிறது. சிந்து,கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் பாயும் இப்பிரதேசம் ,செழிப்பான மண்ணும் ,வளமும்,செல்வமும் மிக்கதாக விளங்குகிறது .இங்கு மக்கள் தொகையும் மக்கள்  நெருக்கமும் அதிகம் .

                                   3.தக்காண பீடபூமி 

                         தக்காண பீடபூமி முக்கோண வடிவமுள்ளது. இதன் வடக்கே 'விந்திய சாத்பூரா 'மலைத்தொடர்களும் ,மேற்கே 'மேற்குதொடர்ச்சி மலைகளும்' கிழக்கே 'கிழக்கு தொடர்ச்சி மலைகளும் ' அமைந்துள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயரமான சிகரம் கேரளாவில் உள்ள 'ஆனைமுடி 'யாகும் . இதன் உயரம் 2695மீ ஆகும் .தக்காண பீடபூமி மிகப் பழமையானதும் மிக்க கடினமானபாறைகளாலும் ஆக்கப்பட்டது .இப்பீடபூமி மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் காணப்படுகிறது .

                                    4.கடற்கரை பிரதேசங்கள் ;

                                       தெற்கில் உள்ள திராவிடர்கள் கடல் வாணிபத்துறையில் சிறந்து விளங்கினர். பண்டைக்கால தமிழகம் கடலாதிக்கம் பெற்றிருந்ததினால் தான் ஈழ நாட்டிலிருந்து ,கீழ்த்திசை நாடுகள் வரை தன ஆதிக்கத்தை ஏற்படுத்த முடிந்தது .சேர ,சோழ ,பாண்டிய மன்னர்கள் கீழ்த்திசைநாடுகளில் குடியேற்றங்கள் அமைக்கவும் ,பண்பாட்டுப் பரிமாற்றம் செய்து கொள்ளவும் இக்கடற்கரைப் பகுதிகளே  உதவி செய்தன .



இந்திய வரலாற்றில் புவியியலின் தாக்கம்:



உலகிலுள்ள பிற நாடுகளைப் போலவே இந்திய வரலாற்றின் போக்கில்
புவியியலின் தாக்கம் காணப்படுகிறது. முதலாவதாக இந்தியாவின்
மாபெரும் பரப்பளவு பல காலமாக இந்தியாவின் அரசியல் ஒற்றுமையை
பாதித்தது. இயற்கையாகவே பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்ட இந்தியா
தனித்தனியாகவே இ யங்கியது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடையும்
வரை ஒரே அரசின் கீழ் அமைந்தது இல்லை. அசோகர், அக்பர் போன்ற
பேரரசர்கள் இந்திய அரசியல் ஒற்றுமைக்கு ஓரளவு முயற்சி செய்தனர்.
எனவே சுதந்திரமாக இயங்கிய பல நாடுகள் இந்திய வரலாற்றின் போக்கை
பாதித்தது.


இரண்டாவதாக, வட இந்தியா, வடமேற்கு பிரதேசங்களுடன் தொடர்பு
கொண்டிருந்ததால் அப்பகுதியில் உள்ள கைபர், போலன், டோக்கி ஆகிய
கணவாய் மார்க்கமாக பாரசீகர், கிரேக்கர், கூனர், துருக்கியர், மங்கோலியர்
மற்றும் முகலாயர் நம் நாட்டின் மீது படை எடுத்தனர். இந்தியாவில்
பேரரசை நிறுவினர்.


மூன்றாவதாக, செழிப்பான சிந்து நதி சமவெளிப் பிரதேசத்தில் சிறந்த
நாகரிகம் தோன்றியது. பெரிய நகரங்கள் தோன்றி பண்பாடும்
கலாச்சாரமும் பரவின.


நான்காவதாக, விந்திய, சாத்பூரா மலைத்தொடர்கள் இந்தியாவை
இரு பகுதிகளாக பிரித்து விட்டதால் வட இந்தியாவுக்கும்,
 தென்இந்தியாவிற்கும் இடையே நெருங்கிய அரசியல்
பண்பாட்டுத் தொடர்பு ஏற்படாமல் போயிற்று.


ஐந்தாவதாக, தென்னிந்திய புவியியல் அமைப்பு சுதந்திரமான அரசுகள்
தோன்றி வளர காரணமாயின. தென்னிந்திய அரசர்கள் கடல்கடந்து
அரசியல் வாணிகத் தொடர்பு கொண்டனர். கலாச்சார தொடர்பும்
ஏற்பட்டது .மேலும் புவியியல் அமைப்பே வட இந்திய கலாச்சாரம்
தென்னிந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுத்தது.

இவ்வாறு இந்திய புவியியல் அமைப்பானது இந்திய வரலாற்றில்
பெரும் மாற்றங்களையும், பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே வரலாறும்
அறிவியலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது. ஒரு நாட்டின்
அரசியல் வரலாறு, பண்பாட்டு வளர்ச்சி, பொருளாதார மேன்மை
ஆகியவை புவியியலின் அடிப்படையில்தான் அமைகின்றன என்பதில்
ஐயமில்லை .



                                                     நன்றி                        
                                                                                               


search related

indian history in tamil
indian history in tamil book
indian history in tamil geographical features
indian history in tamil imayamalai pirathesangal
tamil history geographical features
indian history

இந்திய வரலாற்றில் புவியியலின் தாக்கம்


கடற்கரை பிரதேசங்கள்

Comments