சிந்து சமவெளி நாகரீகம்
நைல் நதிக்கரையில் எகிப்திய நாகரீகம்,டைக்ரீஸ்,யூப்ரடீஸ் நதிகளின் கரைகளில் சுமேரிய ,பாபிலோனிய ,அசிரிய நாகரீகங்கள் தோன்றியது போல சிந்து நதியின் வலக்கரையில் மொகஞ்சதாரோவிலும் ,மேற்கு பஞ்சாப்பில் உள்ள ராவி நதிக்கரையில் உள்ள ஹரப்பா என்னும்மிடத்திழும் சுமார் கி.மு 3000
ஆண்டுகட்கு முன் தோன்றிய சிந்து சமவெளி நாகரிகம் என்பதை புதை பொருள் ஆராய்ச்சியின் மூலம் அறியலாம் .சிந்துசமவெளி நாகரீகத்தின் காலம் செம்புக்காலமாகும் .
ஆதாரங்கள் ;(SOURCES)
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை நாம் இந்த நாகரீகத்தைப்பற்றி அறிய வில்லை .கி.பி .1921ம் ஆண்டு முதல் 1928ம் ஆண்டுவரை நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சி இலாகா அதிகாரிகள் அங்கு பூமியை தோண்டி ஆராய்ச்சி செய்தனர் .அப்போது புதையுண்ட நகரங்களையும் ,மக்கள் உபயோகித்த பாண்டங்களையும் ,கருவிகளையும் ,முத்திரைகளையும் கண்டெடுத்தனர் .இந்த நாகரீகத்தை பற்றி கண்டுபிடிக்க உதவிய பெருமை சர் .ஜான்மார்ஷல் ,ஆர்.வி.தயாராம் சகானி , எம்.எஸ்வாட்ஸ் ,ஆர் .டி .பானர்ஜி ,இ .ஜே .மேகே ,சர் மார்டிமர்வீலர் முதலிய சரித்திர ஆராய்ச்சியாளர்களையே சாரும் .இவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரை landon news என்ற செய்தித்தாளில் ஜான் மார்ஷல் என்பவரால் எழுதப்பட்ட பின்னரே எல்லோருக்கும் தெரிய வந்தது .1934-ல் மீ .எ. மஜும்தார் என்பவர் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பதினைந்து இடங்களைப் பற்றி எழுதி நூலக வெளியிட்டார் .பரப்பும் தன்மையும் ;
சிந்து சமவெளி நாகரீகம் ,ஹரப்பா நாகரீகம் என்றும் அழைக்கப்படுகிறது .புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் கதிரியக்க முன் கார்பன் முறையை வைத்து காலத்தை கணிக்கும் புதிய தொழில்நுட்ப துறையை பயன்படுத்தி சிந்து சமவெளி நாகரீகத்தை கி.மு 3250 க்கும் கி.மு.2750க்கும் இடைப்பட்ட காலத்தில் அமைந்துள்ளார்கள் .வடக்கே பஞ்சாபிலிருந்து அரபிக்கடல் வரையிலும் ,தெற்கே தப்த்தி நதி,குஜராத் வரையிலும் இந்த நாகரீகம் பராயிருந்ததாக கண்டுபிடித்துள்ளனர் . மொஹஞ்சதரோ ,ஹரப்பா தவிர சிந்து மாநிலத்தில் சான் ஹீதரோ ,லோஹம் சோதாரோ , பாலுசிஸ்தானில் உள்ள நல்கெலட் ,குஜராத் மாநிலத்தில் உள்ள ரங்பூர் ,லோத்தல் ,ராஜஸ்தானில் உள்ள காலிபங்கன் ஆகிய இடங்களில் சிந்து சமவெளி நாகரிக சின்னங்கள் காணப்பட்டது
அடுத்து next post ஐ பார்க்கவும்
படிக்க CLICK HERE
அடுத்து next post ஐ பார்க்கவும்
படிக்க CLICK HERE
Comments
Post a Comment