சிந்துசமவெளி நாகரீகம் part 2
ஹரப்பா ;
ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரும் நாகரீகத்தை கண்ட நகரம் இது .பாகிஸ்தானில் மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் மாண்ட் கோமரி மாவட்டத்தில் சட்லஜ் நதிக்கரையில் உள்ள ஒரு சிற்றுராகும் .ஹரப்பா நகரத்தின் அளவு நான்கு கி .மீ ஆகும் .இங்கு மொத்தம் ஆறு மண் மேடுகள் உள்ளன .இந்தமேடுகளிலின் இந்திய தொல்லியல் துரையின் முதல் இயக்குரனான அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவர் கி .பி 1853,1856,1872 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை ஆய்வு மேற்கொண்டனர் .பின்னர் 1921 ம் ஆண்டு தயாராம் சகானி என்பவர் ஆய்வாவை மேற்கொண்டார் .அதன் பின்னர் பல ஆய்வுகள் இங்கு மேற்கொள்ளப்பட்டது .1946ம் ஆண்டு சர் .மார்ட்டின் வீலர் என்பவர் மீண்டும் ஒரு ஆய்வை மேற்கொண்டார் .போஹி என்பவர் ஹரப்பா நாகரீகத்தை விளக்கும் harappan civillization என்ற மிகச்சிறந்த நூலை எழுதியுள்ளார் .
ஹரப்பா நாகரீகத்தின் முத்திரைகள் அனைத்தும் மாவுக்கல்லால் ஆனவை ஆகும் .எல்லா முத்திரைகளிலும் சித்திர எழுத்துக்கள் காணப்படுகின்றன .மேலும் வளையல்கள் , துணிவகைகள் , பொம்மைகள் ,காளைமாட்டு உருவங்கள் ,மட்பாண்ட வகைகள் பல கிடைத்துள்ளன ஹரப்பா நாகரீகம் ஏறக்குறைய கி.மு 3500-கி .மு 2750ம் ஆண்டுகளில் உச்சநிலையை எட்டியிருக்கக்கூடும் .சிந்துவெளி நாகரீகத்தின் பழைய நகரங்களில் ஹரப்பவே முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நாகரீகத்தை ஹரப்பா நாகரீகம் என்று அழைக்கின்றனர் .

Comments
Post a Comment