சிந்து சமவெளி நாகரிகம்(INDUS VALLEY CIVILIZATION)

 சிந்து சமவெளி நாகரிகம்(INDUS VALLEY CIVILIZATION)



முன்னுரை :

                                                          நைல் நதிக்கரையில் எகிப்திய நாகரிகம், டைகீரீஸ், யூப்ரட்டீஸ் நதிகளின் கரைகளில் சுமேரிய, பாபிலோனிய, அசிரிய நாகரிகங்கள் தோன்றியது போல் சிந்து நதியில் வலக்கரையில மொகஞ்சதாரோவிலும், மேற்கு பஞ்சாபிலுள்ள ராவி நதிக்கரையிலுள்ள ஹரப்பா என்னு மிடத்திலும் சுமார் கி.மு. 3000 ஆண்டுகட்கு முன் தோன்றியது சிந்து சமவெளி நாகரிகம் என்பதை புதை பொருள் ஆராய்ச்சியின் மூலம் அறிகிறோம். சிந்துசமவெளி நாகரிகத்தின் காலம் செம்புக்காலமாகும்.

ஆதாரங்கள் : Sources.

                                                இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை நாம் இந்த நாகரிகத்தைப் பற்றி அறியவில்லை . முதல் 1928ம் ஆண்டு வரை நம் பற்றி அறிய வில்லை . கி.பி. 1921ம் ஆண்டு நாட்டின் தொல் பொருள் ஆராய்ச்சி இலாகா அதிகாரிகள் அங்கு பூமியைத் தோண்டி ஆராய்ச்சி நடத்தினர். அப்போது புதையுண்ட நகரங்களையும் மக்கள் உபயோகித்த பாண்டங்களையும், கருவிகளையும், முத்திரை களையும் கண்டெடுத்தனர். இந்த நாகரிகத்தைக் கண்டு பிடிக்க உதவிய பெருமை சர். ஜான் மார்ஷல், ஆர். வி. தயாராம் சகானி, எம்.எஸ் வாட்ஸ், ஆர். டி. பானர்ஜி, இ. ஜே. மேகே, சர் மார்டிமர்வீலர் முதலிய சரித்திர ஆராய்ச்சியார்களையே சாரும். இவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றிய கட்டுரை London News என்ற செய்தித்தாளில் ஜாண் மார்ஷல் என்பவரால் எழுதப்பட்ட பின்னரே எல்லோருக்கும் தெரிய வந்தது. 1934-ல் மீ. எ. மஜும்தார் என்பவர் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பதினைந்து இடங்களைப் பற்றி எழுதி நூலாக வெளியிட்டார்.

 பரப்பும் தன்மையும் : Extent and nature


                                   சிந்து சமவெளி நாகரிகம், ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கதிரியக்கமுள்ள கார்பன் முறையை வைத்து காலத்தைக் கணிக்கும் புதிய தொழில் நுட்பத் துறையைப் பயன்படுத்தி சிந்து சமவெளி நாகரிக காலத்தை கி.மு. 3250க்கும் கி.மு. 2750க்கும் இடைப்பட்ட காலத்தில் அமைந்துள்ளார்கள். வடக்கே பஞ்சாபிலிருந்து அரபிக்கடல் வரையிலும், தெற்கே தப்திநதி, குஜராத் வரையிலும் இந்த நாகரிகம் பரவியிருந்ததாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மொகஞ்சதாரோ, ஹரப்பா தவிர சிந்து மாநிலத்தில் சான் ஹீதாரோ, லொஹம் சொதாரோ, பலுசிஸ்தானிலுள்ள நல்கெலட், குஜராத மாநிலத்தில் ரங்பூர், லோத்தால், (Lothal) ராஜஸ்தானிலுள்ள காலிபங்கன் ஆகிய இடங்களிலும் சிந்து சமவெளி நாகரிகச்சின்னங்கள் காணப்பட்டன.
                                                     மொத்தத்தில் சிந்து சமவெளி நாகரிகம் மேற்கிலிருந்து கிழக்காக தள தி. மீட்டர், வடக்கிலிருந்து தெற்காக 1100 கி.மீட்டர் பரப்பில் ---கா. இது திட்டமிட்டு அமைக்கப்பட்ட சிறந்த நகர் நாகரீக ஆரிய நாகரிகம் அல்லாதது. ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது ஆகும்.  நாகரிகம் என்று வேறு ஒரு சில வரலாற்று வல்லுநரும், இது அத்தன்மையுள்ள தனி நாகரிகம் என்று சில வல்லுநரும் காந்தாது. நன்மையும் சிறப்பும் அக்காலத்தில் சிறந்திருந்த எகிப்து,  என்று சில வல்லுநரும் கருதுகின்றனர். 
                     
                               S: டோமியா நாகரிகங்கட்கு ஒப்பானது எனச் சரித்திர ஆசிரியர்கள் திராவிட நாகரீகம்   இதன் தன்மையும் சிறப்பும் கூறுகின்றனர். சிந்து சமவெளிப்பகுதியில் மொத்தம் 900-க்கும் அதிகமான. பகுதிகளில் தோண்டப்பட்டது. சிறியதும் பெரியதுமான பல நகரங்களும் கிராமங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளில் முக்கியமானவை ஹரப்பா, மொகஞ்சதாரோ, காலிபங்கன், லோத்தால், சுர்கோட்டடா, ரங்பூர், ரூபார், சான்குதாரோ, லொகும்ஜாதாரோ ஆகியவை ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் தோன்றிய இடங்கள்

ஹரப்பா : Harappa

                                                   ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரும் நாகரிகத்தினைக் கண்ட நகரம் இது. பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் மாண்ட் கோமரி மாவட்டத்தில் சட்லஜ் ஆற்றங்கரையிலுள்ள ஒரு சிற்றூராகும். ஹரப்பா நகரின் சுற்றளவு நான்கு கி.மீ. ஆகும். இங்கு மொத்தம் ஆறுமண் மேடுகள் உள்ளன. இந்த மேடுகளில் தான் இந்திய தொல்லியல் துறையின் முதல் இயக்குநரான அலக்சாந்தர் கன்னிங்காம் என்பவர் கி.பி. 1853, 1856, 1872 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை ஆய்வுகளை மேற் கொண்டார். 
                                         பின்னர் 1921ல் தயாராம் சாகானி என்பவர் ஆய்வை மேற்கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து பல அகழாய்வுகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன. 1946-ல் சர். மார்டிமர் வீலர் என்பவர் மீண்டும் ஒரு அகழாய்வை மேற்கொண்டார். போஷி (Posschi) என்பவர் ஹரப்பா நாகரிகத்தை விளக்கும் Harappan Civilization என்ற மிகச் சிறந்த நூல் ஒன்றை எழுதியுள்ளார்.


                                             இந்த அகழாய்வுகளின் மூலம் ஹரப்பா நகரின் தொன்மைப் புலப்பட்டது. இந்த நகரின் அமைப்பும், மொகஞ்சதாரா நகரின் அமைப்பும் ஒரே போலுள்ளது. இரண்டு நகர மக்களும் ஒரே நாகரிகத்தைச் - சேர்ந்தவர்கள் என்பது ஆராய்ச்சி மூலம் தெளிவாயின. இங்கு செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள் பல அறைகளைக் கொண்டும், குழியலறை, கழிவுநீர் வசதி, குப்பைத் தொட்டி வசதி முதலியன கொண்டு அமைக்கப்பட்டு விளங்கின. இங்கு கண்டு பிடிக்கப்பட்ட உணவுக் களஞ்சியம் குறிப்பிடத்தக்கது. இந்த நகரம் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரமாக இருந்திருக்கக் கூடும்.
ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முத்திரைகள் பெரும் பாலும் மாவுக்கல்லால் செய்யப்பட்டது ஆகும். எல்லா முத்திரைகளிலும் சித்திர எழுத்துக்கள் காணப்படுகின்றன. மேலும் வளையல்கள், துணிவகைகள், பொம்மைகள், காளைமாட்டு உருவங்கள், மட்பாண்டவகைகள் பல கிடைத்துள்ளன. 
                                     ஹரப்பா நாகரிகம் ஏறக்குறைய கி.மு. 3500-கி.மு. 2750ம் ஆண்டுகளில் உச்சநிலையை எட்டியிருக்கக்கூடும். சிந்து வெளி நாகரிகத்தின் பழைய நகரங்களில் ஹரப்பாவே முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நாகரிகத்தை ஹரப்பா நாகரிகம் என்றும் தொல்லியலாளர் குறிப்பிடுகின்றனர். 

மொகஞ்சதாரோ : Mohenjo-daro.

                                       'சிந்துவின் தோட்டம்' என்று புகழப்படும் லர்கானா எம் ? நகரிலிருந்து 40கி.மீ தொலைவில் உள்ளது மொகஞ்சதாரோ. டோகா (2) என்ற ரயில் நிலையத்திலிருந்து 11 கி.மீ. தூரம் உள்ளது. R.D. பாபானர்ஜி ,D.R சகானி ஆகியோர் 1922-முதல் இங்கு அகழ்வாராய்ச்சி செய்தார்கள். இரண்டு  பெரிய மண்மேடுகள் தோண்டப்பட்ட போது  இந்த நகரம்
 கண்டுபிடிக்கப்பட்டது. மொகஞ்சதாரோ என்பதற்கு புதையுண்ட நகரம் என்று பெயர்.
                           இங்கு தான் திட்டமிட்டு அமைக்கப்பட்ட தெருக்களும் வீடுகளும் காணப்படுகின்றது. பொதுக்குளியல் குளம், தானியக்கூடம், குருமார்கள் கல்லூரி, வர்த்தகக் கட்டிடங்கள் ஆகியவை காணப்படுகின்றன. 

காலிபங்க ன் : Kalibangan

                                                " இந்த நகரம் ஹரப்பாவுக்கு தென்கிழக்கே 160 கி.மீ. தூரத்தில் உள்ளது. காகர் (Ghaggar) நதியின் வலது கரையில் உள்ளது. இங்கும் இரண்டு மண் மேடுகள் B.K. தாபர் என்பவர் தலைமையில் 1960- தோண்டப்பட்டன. இங்கு காணப்படும் சுட்ட செங்கல்களின் அளவு 30x20x10 செ. மீ ஆகும். இங்கு இரண்டு பெரிய தெருக்கள் காணப்படுகின்றன. திட்டமிட்டு கட்டப்பட்ட பல வீடுகள் உள்ளன. ஆனால் இங்கு தெருக்களில் கழிவுநீர் செல்லும் சாக்கடை வசதி காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு பல அக்னி குண்டங்கள் (Fire alters) காணப்படுகிறது. 
                              ஆனால் அதன் அருகே வழிபாட்டுப் பொருட்கள் எதுவும் காணப்படுகிறது. ஆனால் அதன் அருகே பாண்டங்கள், எடைக்கற்கள், செப்புத்தகடுகள், மீன்பிடிக்கும் தூண்டில் முள்கள் கண்டெடுக்கப் பட்டன. பல உருவங்களைக் கொண்ட ஏராளமான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டன. காலிபங்கன் இராஜஸ்தானில் கண்டறியப்பட்ட ஹரப்பா நாகரிகம் ஆகும். 

லோத்தால் : Lothal

                                       சிந்து சமவெளி நாகரிகத்தைக் கொண்ட லோத்தால் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து தெற்காக 38 கி.மீ. தொலைவில் சரக்வால் என்று சிற்றூரின் பகுதியாக அமைந்துள்ளது. அரபிக்கடல் அருகே சபர்மதி ஆற்றின் துணை ஆறான பொகோவோவின் (Bhogavo) கரையிலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அகழ்வாய்வுகள் 1955-56 ஆண்டுகளில் எஸ்.ஆர். ராவ் (S.R. Rao) என்பவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
                                         
                            சிந்து சமவெளி நாகரிகத்தின் கூறுகள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டதின் விளைவாக, இந்த நாகரிகம் இந்தியாவில் குஜராத் வரை பரவியிருந்தமை வெளியிடப்பட்டது. லோத்தால் என்பதற்கு இறந்தவர் மேடு என்பது பொருள் இது ஒரு வணிக நகரமாக இருந்திருக்க வேண்டும். இங்கு நடைபெற்ற அகழாய்வு மூலம் இங்கு மூன்று பண்பாட்டுக்கால் மக்கள் வாழ்ந்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
                                   ஹரப்பாவில் கிடைத்தது போன்ற எழுத்துப் பொறிப்புகள் கொண்ட முத்திரைகள் இங்கும் கிடைத்தன. மற்றும் செம்பால் செய்யப்பட்ட தூண்டில்கள், பல எனக்கற்கள், வண்ணம் பூசப்பட்ட மட்கலன்கள், கிண்ணங்கள், ஜாடிகள், தொட்டிகள், குவளைகள் கிடைத்தன.
                            மாக்கல்லினால் செய்யப்பட்ட மணிகளும், சங்கினாலும் தந்தத்தினாலும் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களும், செம்புப் பாத்திரங்களும் இங்கு பெருமளவில் கிடைத்தன. லோத்தாலில் கிடைத்த தொன்மைச் சின்னங்களுள் குறிப்பிடத்தக்கது சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கப்பல்துறையாகும். 
                                   
                                     சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் கப்பல்கள் தாங்கவும் ஏற்ற செயற்கையான துறையாக இத்துறைமுகம் கட்டப்பட்டது. இக்கப்பல் துறை 219மீ நீளமும் 33 மீ அகலமும் கொண்ட செவ்வக அமைப்புடையது.
காம்பே வளைகுடா வழியாக வரும் கப்பல்கள் பொகாவா ஆற்றினுள் நுழைந்து அங்கிருந்து ஒரு கால்வாய் வழியாக இத்துறையை வந்தடைந்தன. லோத்தால் மிகப் பழங்காலத்திலேயே வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்ட நகரமாக விளங்கியதைத்தான். இந்த கப்பல் துறை காட்டுகிறது.
                               
                                      இங்கு கிடைத்த பாரசீக வளைகுடா முத்திரை இதனை உறுதி செய்கிறது. மேலும் உர், சோசா (Ur. Sosa) ஆகிய தொன்மை நகரங்களுடன் தொடர்பு கொண்டு விளங்கியிருத்தல் வேண்டும். கரிமம் 14 (Carbon14) முறைப்படி லோத்தால் கி.மு. 2200க்கும் கி.மு. 1700க்கும் இடைப்பட்ட காலத்தில் செழிப்பாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த லோத்தால் நகரத்தை வெள்ளப் பெருக்கு அழிந்துள்ளதை அகழ்வாய்வு மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

                                   இவை தவிற சுர்கோட்ட டாகு என்ற பகுதி குஜராத்திலுள்ள கட்சி மாவட்டத்தில் உள்ளது. இங்கு 1964-ல் ஜெகபதி ஜோஷி என்பவரால் அகழ்வாராய்ச்சி மேற் கொள்ளப்பட்டது. இங்குதான் குதிரையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. ராங்பூர் என்ற இடத்தில் S.R. ராவ் என்பவரால் 1953-ல் அகழ்வாய்வு செய்யப்பட்டது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்பு அம்சங்கள்: 


1. நகர அமைப்பு : City

                                      மொகஞ்சதாரோ உலகிலேயே முதன் முதலில் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரமாகும். இந்த நகரத்தில் கோட்டைப் பகுதி (Citadal) நகரப் பகுதியென இரண்டு பகுதிகள் காணப்படுகின்றன. கோட்டைப் பகுதியில் அரசர்களும், நகரப்பகுதியில் மக்களும் வாழ்ந்தனர். நகரம் விஸ்தீரணமாகவும் பல வசதிகளைக் கொண்டதாகவும், சுற்றுச் சுவர் உள்ளதாகவும் காட்சி அளிக்கிறது. குடியிருக்கும் வீடுகள் பெரிதும் சிறிதுமாக அனேகம் உள்ளன. இரண்டு அறைகள் உள்ள வீடுகளும் மேல் மாடிகளைக் கொண்ட வீடுகளும் இருந்தன. ஜன்னல்களும் கதவுகளும் பொருத்தப்பட்டதாகவும் இருந்தன ஒவ்வொரு வீட்டின் நடுவிலும் திறந்த முற்றம் இருந்தது. தெருவோரச் சுவர்களில் ஜன்னல்கள் இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் கிணறும், குளியலறையும் உள்ளது. கழிவு நீர் " தெருவிலுள்ள சாக்கடையுடன் கலந்தன.   


கட்டிடங்கள், தெருக்கள், சாக்கடை போன்றவை கட்டுவதற்கு செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. அரண்மனை போன்ற பெரிய கட்டிடங்கள் பல இருந்தன. இதன் உபயோகத்தைப் பற்றி தெளிவான கருத்துக்கள் இல்லை . ஹரப்பாவில் மிகப் பெரிய தானியக்களஞ்சியம் உள்ளது. ஹரப்பாவின் கண்டுபிடிப்புகளில் இது முக்கியமானது ஆகும். 

                                இது 169 அடி நீளம் 135அடி அகலமும் உள்ளது. எலிகள் புகுந்து தானியங்களைச் சேதப்படுத்தாவண்ணம் கட்டப்பட்டுள்ளது. தானியக்களஞ்சியம் வரியாக பொருள் சேமித்து வைக்கப்பட்ட இடமாகும். வாழ்க்கை வசதி நிரம்பிய இது போன்ற நகரம் ஒன்றை பண்டைக் காலத்தில் காண்பது அரிது. சிந்து வெளி நகர அமைப்பு லங்காஷயர், மான் செஸ்டர் ஆகிய நகரங்களின் அமைப்பைப் போல் உள்ளது என்று சர்.ஜாஸர் மார்ஷல் கூறியுள்ளார். 

2) தெருக்கள் : Streets

                                          தெருக்கள் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும், அமைந்திருந்தன. அவை ஒன்றை ஒன்று செங்கோணத்தில் சந்தித்தன. பெரிய தெருக்களும் சிறிய தெருக்களும் உண்டு. நகரத்தின் முக்கியத்தெரு 33 அடி அகலம் உள்ளதாக இருந்தது. தெருக்களின் இரு பக்கங்களிலும் மூடப்பட்ட பாதாள சாக்கடை காணப்படுகிறது. பாதாள சாக்கடை இந்நாகரிகத்தின் சிறப்பு அம்சமாகும். பூமிக்கடியில் இரண்டு அடி ஆழத்தில் சாக்கடை குழாய்கள் பதிக்கப்பட்டிருந்தன. வீட்டிலிருந்து கழிவு நீர் சிறிய குழாய்கள் மூலமாக தெருச்சாக்கடைக்கு வந்து சேர்ந்தன. தெருச்சாக்கடை சுத்தம் செய்வதற்கு ஏற்ற வகையில் மனிதன் நுழையும் அளவில் துவாரங்கள் இருந்தன. அத்துவாரங்கட்கு மூடிகள் போடப்பட்டிருந்தன.


 3) பொதுக்குளியல் குளம்: Great Bath

                                          மொகஞ்சதாரோவின் கண்டுபிடிப்புகளில் பொதுக்குளியல் குளம் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது. நீண்ட சதுர வடிவமானது. இது 180 அடி நீளம் 108 அடி அகலம் கொண்டது. இதைச் சுற்றிலும் தாழ்வாரங்கள் உள்ளன. தாழ்வாரத்தில் சிறு சிறு அறைகள் உள்ளன. குளத்தின் அடிப்பாகம் நன்றாக பூசப்பட்டிருக்கிறது. வெளியேயிருந்த கிணற்றிலிருந்து சுத்தமான குழாய்கள் மூலம் நீர் வரவும் குளத்து அசுத்த நீர் வேறுகுழாய் மூலம் வெளியேற்றவும் ஏற்பாடுகள் இருந்தன. இக்குளத்திற்கு ஆறு நுழைவு வாயில்கள் உள்ளன. இக்குளத்தைப் பார்க்கும் போது அந்நகர மக்கள் தண்ணீருக்கும், குளிப்பதற்கும் தூய்மைத் தன்மை அளித்திருந்தார்கள் என்ற தெரிகிறது.

4) உணவு வகைகள்: Food

                                          சிந்து சமவெளி மக்கள் கோதுமை ஆகாரத்தை சிறந்த உணவாகக் கருதினர். பார்லி, பீன்சு, பட்டாணி, காய்கறிகள் ஆகியவற்றை விரும்பி உண்டனர். மேலும் ஆடு, மாடு, கோழி, பன்றி, புறா, வாத்து, ஆமை, மீன் ஆகியவற்றின் இறைச்சியையும் உண்டனர்.

 5) உடைகளும், அணிகலன்களும்: Dress and ornaments

                                 சிந்து சமவெளி ம க் க ளி ன் ஆடைகள்  பருத்தியாலும் கம்பளியாலும் நார்பட்டினாலும் நெய்யப்பட்டிருக்க வேண்டும். எகிப்தில் கூட அக்காலத்தில்
 பரு த் தி   உபயோகிக்கப்படவில்லை. சால்வை போன்ற நீண்ட ஆடைகள் அணிந்தனர். சிந்து சமவெளி மக்கள் அணிந்த ஆபரணங்கள் கழுத்துப்பட்டையுடைய  சட்டைகளையும், பொத்தான் தைத்த சட்டைகளையும் அணிந்தனர். பெண்கள் இடுப்பில் பாவாடையும், மேலாடை ஒன்றும் அணிந்தனர். தலையில் ஆண் பெண் இருவரும் முண்டாசு கட்டிக் கொண்டனர். ஆண்களும் பெண்களும் அணிகலன்கள் அணிவதில் ஆர்வமுடையவர்களாக இருந்தனர். காதணி, கைவளையல், மோதிரம், காலில் காப்பு, கழுத்தில் அட்டிகை, மூக்குத்திகள் போன்ற பல் அணிகலன்களை அணிந்தனர். அணிகலன்கள் தங்கம், வெள்ளி, செம்பு: வெண்கலம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டன ஆகும். இந்த ஆபரணங்கள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. தற்கால நகைகட்டு அவைகள் எவ்விதத்திலும் குறைவானது என்று கூற முடியாது.

 6) வீட்டிற்கு தேவையான பொருட்கள்: - 

                                       பலவகையான மட்பாண்டங்கள் சக்கரத்தின் உதவியால் செய்யப்பட்டு உபயோகிக்கப்பட்டன. சில மட்பாண்டங்களில் வர்ணம் பசப்பட்டும், ஓவியம் வரையப்பட்டும் பளபளப்பாக இருக்கின்றன. வெண்கலம், தாமிரம், வெள்ளி, பீங்கான் இவைகளினால் செய்யப்பட்ட தட்டு, கிண்ணம், கோப்பை, அகப்பை, ஜாடி, போன்றவை கிடைத்துள்ளன. இரும்பினால் செய்யப்பட்ட பொருள் ஒன்றுமே காணப்படவில்லை. எனவே இந்த மக்களுக்கு இரும்பைப் பற்றிய அறிவு இல்லையெனத் தெரிகிறது. எலும்பினாலும் தந்தத்தினாலும் செய்யப்பட்ட ஊசிகளும், சீப்புகளும், தாமிர வெண்கல கோடாரிகள், அரிவாள், கத்திகள், உளிகள், ஆகியவையும் பயன்படுத்தப்பட்டன. நாற்காலி, கட்டில், மேஜை ஆகியவற்றையும் உபயோகித்து வந்தார்கள். சிந்துவெளி மக்கள் அறிந்திராத உலோகம் இரும்பு ஆகும்.

7) வாணிபம்:Trade and Commerce

                                       சிந்து வெளிமக்கள் பொருளாதார வாழ்க்கை மிகவும் சீராக நடைபெற்று வந்ததற்கு அவர்கள் நடத்திய உள்நாட்டு வெளிநாட்டு வாணிபமே தக்க சான்று ஆகும். வெளிநாடுகளிலிருந்து தானியங்கள் இறக்குமதி செய்து பெரிய களஞ்சியங்களில் சேமித்து வைத்திருந்தனர். தற்போதைய பாக்கிஸ்தான் எல்லைப்புறத்தில் சுற்றியிருந்த . நாடுகளிலிருந்து நவரத்தினங்களும், பிற மணிகளும், உலோகங்களும் இறக்குமதியாயின. சிந்து சமவெளி முத்திரைகள் மேற்கு ஆசியாவில் காணப்படுவதும் இரண்டு பகுதிகளுக்குமிடையே வாணிபம் நடைபெற்று வந்தது என்பதற்கு சான்றாகும்.
இந்தியா முழுவதிலும் இவர்களது உள்நாட்டு வாணிபம் - ""பருகியிருந்தது. காஷ்மீர், ஆப்கானிஸ்தான், பர்மா, தமிழகம் ஆகிய திகளுடன் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்தனர். இங்கு டைத்துள்ள முத்திரைகள் அயல்நாட்டு வாணிபத் தொடர்பால் 'டத்ததாகும். ஈளம், சுமேரியா, மெசபடோமியா, ஈராக், எகிப்து, "னியா போன்ற நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். இவ்வாறு சிந்து மக்களின் வளமான வாழ்க்ககை உள்நாட்டு வாணியத்தினால் மட்டுமேயன்றி வாணிபத்தாலும் வளம் பெற்றது.

பொழுதுபோக்குகள்:

                                              சிறு பிள்ளைகள் கோலிக்குண்டுகள், பந்துகள், பகடைகள் விளையாடியிருக்கிறார்கள். ஊதுகுழல், சிறு வண்டிகள், ஆண், பெண், பறவை, விலங்கு ஆகிய பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவைகள்  சிறுவர்கட்கான விளையாட்டுப் பொருட்கள் ஆகும். சிந்துவெளி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். கோழிச்சண்டை, காளைச் சண்டை, கௌதாரிச்சண்டை முதலியவற்றைக் கண்டுகழித்தார்கள், வேட்டையாடுதலும் இவர்களின் பொழுது போக்காக இருந்தன. சதுரங்கம் இவர்களது சாதாரண பொழுது போக்க விளையாட்டாகும்.

 9) பழக்கப்பட்ட விலங்குகள்: Dokestic Animals

                                             அழிந்து போன மிருகங்களின் எலும்புக் கூடுகளிலிருந்து அக்கால மக்கள் விலங்குகளைப் பயன்படுத்தியதை அறிய முடிகிறது. தமிழ் பருத்த மாடுகள், எருமை, ஆடு, யானை, ஒட்டகம், பன்றி முதலிய விலங்குகளை அறிந்திருந்தனர். குதிரைகளின் உபயோகத்தை அவர்கள் அறியவில்லை குழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் நாயின் உருவம் பொறிக்கப் பட்டிருப்பதால் அம்மக்கள் நாய்களை வளர்த்தார்கள் எனத் தெரிகிறது. காண்டாமிருகம், புலி, குரங்கு, கரடி, முயல், மான் ஆகியவற்றை அவர்கள் அறிவார்கள்.

10) முத்திரைகள்: Seals

                                          சதுரமானதும் சற்று நீளமானதும், உருண்டையானது மான ஐநூறுக்கும் மேற்பட்ட முத்திரைகள் கிடைத்துள்ளன. அவைகள் களிமண்ணும், மணலும் சேர்ந்த கலவையினால் ஆனவை. இம் முத்திரைகள் பலவற்றில் விலங்கின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒற்றைக் கொம்பு விலங்கு, எருது, யானை, பலசெடி கொடிகள், மக்கள், ஆண், பெண், கடவுள் வடிவங்கள் காணப்படுகின்றன. இம் முத்திரைகளில் ஒரு வகையான எழுத்துக் குறிப்புகள் இருக்கின்றன.

                                             ஆனால் அந்த எழுத்துக் குறிப்புகள் அறிஞர்களால் இதுவரை தெளிவாக்கப்படவில்லை.
 ஒரு முத்திரையில் கப்பல் உருவம் உள்ளது. இம் முத்திரைகளில் சில மெசபடோமியாவிலும், ஈரானிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் தெளிவாக்கப்பட்டாள்  சிந்து சமவெளியின் அரசியல் வரலாற்றையும்  பண்பாடுகளையும் தெளிவாக அறிய இயலும். இந்த முத்திரைகள்  ஹரப்பாவின் கலைத்திறனை வெளிப்படுத்தும் சான்றுகளாகும்.

 11) எழுத்து : Writing

                                          மொகஞ்சதாரோவில் விளங்காத பொருள் அவர்களின் எழுத்து ஆகும். இந்த எழுத்துக்கள் சித்திர எழுத்து வகையைச் சார்ந்தது ஆகும். ஒரு வரி இடப்புறம் இருந்து வலப்புறம் போவதும் அடுத்த வரி வலப்புறம் இருந்து இடப்புறம் செல்வதுமாகக் காணப்படுகின்றன. ஏறக்குறைய 396 குறிகள் எண்ணப்பட்டுள்ளன. வரிகள் குறுகியே உள்ளன. இக்குறிகளில் ஒலியை அறிய முடியவில்லை . இதுவரை பிராணநாத், ஹண்டர், ஹரான்சி, ஹிராஸ், T.N.ராமச்சந்திரன் (Prananath, Hunter, Hronzy, Heras) ஆகியோர் இந்த எழுத்தை அறிய முயன்றுள்ளனர். ஹிராஸ் பாதிரியார் மொகஞ்சதாரோ மக்களின் எழுத்து திராவிட மொழியின் முன்னுருவம் {Paroto-Dravidian) என்று கருதுகிறார். ஒரே விதமான குறிகள் மீண்டும் மீண்டும் தோன்றுவதால் மொஞ்சதாரோ எழுத்து சித்திர முறையும், ஒலிமுறையும், (Pictographic and Phoenetic) இணைந்தது என்று கூறலாம். மேலும் இந்த எழுத்துக்கள் சுமேரிய, எகிப்து, ஹிட்டைட் ஆகிய எழுத்துக்களுக்கு தொடர்புடையன போல காணப்படுகின்றன.

                                            ரஷ்ய அறிஞர்கள் சிந்து வெளி எழுத்துக்களை கம்ப்யூட்டர் உதவியுடன் அறிந்து அவை திராவிட மொழியைச் சார்ந்தவையே என்று உறுதிபடக் கூறுகின்றனர். சிந்துவெளி எழுத்துக்களை ஆராய்ந்த ஐராவதம் மகாதேவன் என்பவர் அவை திராவிட மொழியைச் சேர்ந்தவை என்றும் தமிழ் அதிலிருந்து தோன்றியது என்றும் கூறுகிறார். காலைக்கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது சிந்து வெளி எழுத்துக்கள் மி. அழகாக உள்ளன. சவர்கார கல்லின் மீது சுண்ணாம்பைத் தடவிச் சுட்டி அதன் மீது எழுத்துக்களை எழுதும் கலையை சிந்து வெளி மக்கள் அறிந்திருந்தனர்.

12) நுண்க லைகள்: Fine Arts

                                       மொகஞ்சதாரோ மக்களின் கலைத்திறமை அங்கு கிடைத்த முத்திரைகளில் காணப்படும் விலங்குகளின்
உருவங்கள் செதுக்கப்பட்டதிலிருந்து தெரிகிறது. இந்திய வரலாற்றில் அசோகர் காலத்து கலைஞர்கள் தவிர வேறு யாரும் மொகஞ்சதாரோ கலைஞர்கள் போல விலங்குகளின் உருவங்கள் இயற்கை ,சிறிதும் மாறாமல் செதுக்கியதில்லை. ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள கற்சிலைகள் சில அழகில் கிரேக்கர் சிலைகளை. ஒத்தவையாக தென்படுகின்றன. வெண்கலத்தில் செதுக்கப்பட்ட நடனமானது, தாடியுள்ளயோகி மற்றும் பல சிற்பங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது சிந்து சமவெளி மக்களின் அழகுணர்ச்சியும், கலையார்வமும் தெரியவருகிறது.

 13) ஓவியக்கலை : Painting

                                                சிந்து வெளியில் கிடைத்துள்ள முத்திரைகளில் பல திறப்பட்ட புடைப்போவியங்கள் (Base-relief) காணப்படுகின்றன. மூன்று முகங்களை உடைய உருவம், கொம்புள்ள தேவதைகள், புலி, ஆடு, மாட்டுக்கொம்பும் வாலுமுடைய மாந்தனின் உருவம் போன்ற விந்தையான ஓவியங்கள் இம்முத்திரைகளில் காணப்படுகின்றன. இவை சிந்து மக்களின் ஓவியக் கலைத் திறனைக் காட்டுகின்றன. சிந்து வெளியில் கிடைத்துள்ள சுடுமண் சிற்றுருவங்களிலும் பல அழகிய ஓவியங்கள் காணப்படுகினறன. இங்கு கிடைத்துள்ள மட்பாண்டங்களின் மீது தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் மிகவும் சிறப்பானவை. இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டதாழிகளின் மேல் பறவைகள், மயில்கள், மீன், ஆமை; இலை, கொடி போன்ற ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களில் உயிரோட்டம் காணப்படுகிறது.

14) அளவைகள்: Measurements

                                                        சிந்துசமவெளி மக்கள் நிறுத்தலளவையும் முகத்தலளவையையும்  நன்கு அறிந்திருந்தனர். ஒரு சிப்பியில் 0.64 அங்குல அளவுக்கு ஒன்றாக  வரைகள் காணப்படுகின்றன. ஒன்பது அலகும். ஐந்தாவது அலகில் ஒரு  புள்ளியும் காணப்படுவதால் அம்மக்கள் தசம முறையைப் பற்றி அறிந்திருந்தார்கள் என்று எண்ண இடமிருக்கிறது. அவர்களது ஒரு அடி (one foot) என்பது 13.2 அங்குல முடையதாக உள்ளது. இந்த அலகுதான் எகிப்து உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாம் காணப்படுகிறது. சிந்துவெளி மக்களின் எடைக்கற்கள் 13.64 கிராம்களே உள்ளன. சிறிய தராசுகளும் பெரிய தராசுகளும் கிடைத்துள்ளன. நீளத்தை அளக்கும் வெண்கலத்தினாலான அளவுகோல் ஒன்றும் கிடைத்துள்ளன.

15) சவ அடக்கம்: Cremation

                                                    இறந்தவர்களின் உடல்களை மூன்று வழிகளில் அடக்கம் செய்தனர். முழு உடலையும் அப்படியே புதைத்தனர். உடலை பறவைகளுக்கும் விலங்குகட்கும் தின்னக் கொடுத்து எஞ்சிய எலும்புகளை ஜாடியில் வைத்துப் புதைத்தனர். உடலை எரித்துப் பின் கிடைக்கும் சாம்பலை தாழிகளில் வைத்துப் புதைத்தனர். இவர்களது சவக்குழிகளை ஆராயும் போது மறுமையில் இவர்கள் நம்பிக்கையுடையவர்கள் என்பது தெளிவாகிறது. 

16) சமயம் : Religion

                                          ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளின் மூலமாகவே மக்களின் சமயத்தைப் பற்றி ஓரளவு அறிய முடிகிறது. மற்றப்படி அவர்களின் சமயத்தைப் பற்றி அறிய போதிய சான்றுகள் இல்லை. கோவில்கள் சிந்து வெளியில் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை. பல தேவதைகளை சிந்து வெளி மக்கள் வணங்கினர். நரபலியிட்டு சக்தியை அவர்கள் வணங்கியதாகத் தெரிகிறது. கடவுளுக்கு ஆடுகளையும் பலியிட்டனர்.
                                                                                                                                                                                                            ஒரு முத்திரையில் காணப்படும் உருவம் தவக்கோலம் அல்லது யோக நிலையில் அமைந்துள்ளது. அதன் இரு பக்கங்களிலும் யானை, புலி, காண்டாமிருகம், காளை ஆகிய மிருகங்கள் உள்ளன. அந்த உருவத்திற்கு மூன்று தலைகள் உள்ளன. தலையிலிருந்து இரு கொம்புகள் போன்ற வடிவம் உள்ளது. இந்த உருவத்தை சர் ஜான் மார்ஷல் போன்றவர்கள் சிவனின் உருவமென்று கருதுகிறார்கள். இதனை பசுபதி, அல்லது விலங்குகளின் தலைவன் என்று கூறுகிறார்கள். 

                                                  இதனால் சிந்து மக்கள் சைவத்தைப் பின்பற்றினர் என்று கூறப்படுகிறது. இந்து மத சம்பிரதாயங்கள் பல அன்றே மக்களால் கடைப்பிடிக்கப்பட்டன. உதாரணமாக லிங்கம், மரம், நீர், பாம்பு, நெருப்பு, காடு, மலை, ஆறு ஆகியவற்றை வணங்கினார்கள். எருதையும் புனிதமாகக் கருதினார்கள். ஆகவே சிந்து சமவெளி மக்களின் சமயக் கருத்துக்கட்கும், இன்றைய இந்துக் கோட்பாடுகட்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம். இதுவரை கோவில் இருந்ததாக ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.  
                                  
                                     சிந்துசமவெளி நாகரிகத்தின் சிறப்பை அறிவிக்கவல்ல இலக்கிய சான்றுகளோ பிற எழுத்து ஆதாரங்களோ இல்லை என்பது வருந்ததக்கது. பிற நாடுகளில் இக்குறைபாடுகள் இல்லை . இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள முத்திரைகளிலுள்ள எழுத்து வடிவங்கள் இன்று வரை முழுமையாக அறியப்படாமல் இருப்பதால் அந்நாகரிகத்தைப் பற்றி திட்டவட்டமாக அறிந்து கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகவே அரசியல் முறைகள் பற்றியும், மக்கள் பண்புகள், மதம் ஆகியவை பற்றியும் திட்டமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை . '

     சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவுக்குக் காரணங்கள்:

- உயர்ந்த வசதிகளையும், நாகரிக வாழ்க்கையையும், போக்குவரவு வசதிகளையும் பெற்றிருந்த இவ்வளவு மேம்பட்ட நாகரிகம் எப்படி அழிந்தது என்பது பற்றி வரலாற்று ஆசிரியர்களிடையே கீழ்கண்ட பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

  • ஆசிரியர்கள் படையெடுத்து வந்து இந்த நாகரிகத்தை அழித்தனர் என்று மார்டிமர் வீலர் போன்ற ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

  •  நாகரிக மற்ற ஒரு முரட்டு ஜாதியினர் வந்து சிந்து மக்களுடன் போரிட்டிருக்கவேண்டும். ஏனெனில் மொகஞ்சதாரோவில் புதைக்கப்படாமல் சிதைக்கப்பட்ட எலும்புக் கூடுகள் ஒரே இடத்தில் காணப்படுகின்றன. பகைவர்களின் தாக்குதல்களை இந்த எலும்புக் கூடுகள் நிரூபிக்கின்றன.

  •  இம்மக்கள் தங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை , அருகிலுள்ள சிந்து நதியைப் பயன்படுத்தி விவசாய வளர்ச்சியை மேற் கொள்ளவில்லை . மேலும் வறட்சியின் காரணமாகவும் இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம். கடைசியாக, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதன் விளைவாக நதியின் போக்கு அடிக்கடி மாறுபட்டு இந்த நாகரிகத்தை அழித்திருக்கக் கூடும் என்று லேம்பிரிக் {IAMEBRICK) என்ற வல்லுநர் கருதுகிறார். புத்த பிரகாஷ் என்பவர் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம் என்று கருதுகிறார். ஆனால் பொதுவாக சிந்துவெளி நாகரிகத்தின் அழிவு ஒழுங்கற்ற முறையிலும் நீண்டகாலமாகவும் நடைபெற்றது என்று கருதப்படுகிறது. பல இடங்களில் பல்வேறு காரணங்களால் சிந்து சமவெளி நாகரிகம் அழிந்தது. 

சிந்து வெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள்: -

மிக உயர்ந்த சிந்து வெளி நாகரிகத்தை உருவாக்கியவர்களைப் பற்றித் திட்டமாக கூற இயலாது. சில ஆசிரியர்கள் சிந்துவெளி மக்கள் சுமேரியாவிலிருந்து வந்த சுமேரியர்கள் என்கிறார்கள். வேறு சிலர் கருத்துப்படி இந்நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் திராவிடர்கள் எனப்படுகிறது. திராவிடர் எனப்பட்டவர் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்தனர் என்றும் முக்கியமாக சிந்து, பலுசிஸ்தான்,பஞ்சாப் முதலிய இடங்களில் பரவலாக இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. சிந்து வெளியில் கிடைத்துள்ள மண்டை ஓடுகள், திராவிடர்களின் மண்டை ஓடுகளை ஒத்து உள்ளது. 
      
                                மேலும் வேதங்களில் கூறப்பட்ட தஸ்யூக்கள் திராவிடராக இருக்கலாம் என்று கருதப்படுவதால் இந்நாகரிகத்தை உருவாக்கியவர்கள் அவர்களே என்று கருத இடமுண்டு.
வேறு சில ஆசிரியர்களே சிந்துவெளி நாகரிகத்தின் தந்தையாரென்றும், தங்கள் நாடு நகரங்கள் சிந்துவில் அழிந்த பின் அவர்கள் மேற்கு ஆசியாவுக்கு சென்று விட்டனர் என்றும் கூறுகின்றனர். ஆனால் சிந்துவெளி மக்கள் ஆரியராகவோ, திராவிடராகவோ இல்லாமல் வேறு ஒரு வகுப்பினராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 

                                   ஆனால் இந்நாகரிகம் ஆரியரல்லாததும், அவர்களுக்கு முற்பட்டது எனவும், ஆரிய நாகரிகத்தை விட மேலானது எனவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஹிராஸ் பாதிரியார் இதைத் திராவிட நாகரிகம் என்று கருதுகிறார்.

 சிந்து சமவெளி நாகரிகம் பிற நாகரிகங்களுடன் ஒப்பிடப்படல்:

சிந்து வெளிப் பண்பாடுகளுக்கும் எகிப்திய, சுமேரிய மெசபட்டோமியப் பண்பாடுகட்கும் ஒற்றுமை இருக்கிறது. இவைகள்  அனைத்தும் வரலாற்றுக்கு முந்திய காலத்தவை. நகர வாழ்க்கை பாண்டங்கள் செய்தல், சுட்ட செங்கற்களில் உபயோகம், போர்கருவிகள் போன்றவற்றில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாகரிகமும் தனித்தனி எழுத்து முறையைக் கொண்டிருக்கின்றன. சிந்துவெளி மக்கள் பருத்தி ஆடைகளை உபயோகித்தனர். எகிப்திலும் சுமேரியாவிலும் கோவில்களும் அரண்மனைகளும் உண்டு. சிந்து வெளியில் அவைகள் இல்லை. சுமேரிய மக்கள் குடிசைகளில் வாழ்ந்தார்கள். சிந்து வெளி நாகரிகம் எகிப்து சுமேரிய பண்பாடுகளை விட உயர்ந்தது என்று சர்.ஜான் மார்ஷல் கருதுகிறார்.
                                                                                                                                                                                                   சிந்து சமவெளி நாகரிகம் வேதகால நாகரிகத்தை விட வேறுபட்டதும், காலத்தால் முற்பட்டதும், சிறப்பானதுமாகும் என்பது பெரும்பான்மை வரலாற்றாசிரியர்களின் கருத்து. இந்த ' இரண்டு நாகரிகங்களையும் இனி ஒப்பீடு செய்யலாம்.
  •  சிந்து வெளி மக்கள் வெண்கலம், செம்பு ஆகியவற்றையே பயன்படுத்தினர். ஆனால் இரும்பின் பயன் தெரியாது. குதிரைகளையும் அறிந்திருக்கவில்லை . ஆனால் ஆரியர்கள் இரும்புக் கருவிகளையும், குதிரைகளையும் பயன்படுத்தினர்.


  • சிந்து வெளி நாகரிகம் நகர நாகரிகம் ஆகும். மக்கள் சுகபோக வாழ்வை மேற்கொண்டிருந்தனர். ஆனால் வேதகால நாகரிகம் கிராம் நாகரிகம் ஆகும். சிந்து வெளி மக்களுக்கும் சமஸ்கிருத மொழிக்கும் தொடர்பு இல்லை. ஆனால் ஆரியர்கள் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தினர்


  • சிந்துவெளி மக்கள் வேளான்மையை மேற்கொண்டு நிலையான ஒரு இடத்தில் வாழ்க்கை நடத்தினர். ஆனால் ஆரியர்கள் ஆடு மாடு மேய்த்து இடம் விட்டு இடம் பெயரும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தனர்.

  •  சிந்து வெளி மக்கள் எருதுகளையும், சிவன், லிங்கம் ஆகியவற்றையும் வணங்கினர். ஆனால் ஆரியர்கள், பசு, சூரியன், வர்ணன். ஆகியவற்றையும் வணங்கினர்.




  •  சிந்துவெளி மக்கள் கலை நோக்கு உடையவர்கள், நடை, உடை, பாவனைகளில் நாகரிகமாக விளங்கினார்கள். போர் செய்வதில் நாட்டமில்லை. நீண்ட தலையையும், குட்டை உருவமும், சுருட்டை முடியையும் உடையவர்கள். ஆனால் ஆரியர்கள் சாதாரண வாழ்வையே வாழ்ந்தனர். வேலைப்பாடு இல்லாத சாதாரண மட்பாண்டங்களையே பயன்படுத்தினர். ஆரியர்கள் போர் செய்வதில் நாட்டம் கொண்டவர்கள். நெடிய உருவமும் சிவந்த மேனியும் கொண்டவர்கள் ஆரியர்கள்.இதனால் சிந்து வெளி நாகரிகம், வேதகால நாகரிகத்தினின்று மாறுபட்டது என்றும், மேம்பட்டது என்றும், காலத்தால் முற்பட்டது என்றும் கூறலாம். மேலும் அது தற்கால இந்திய நாகரிகத்தின் அடிப்படையை அமைத்தது என்று கூறினால் மிகையாகாது.


                                                                       🔯🔯🔯🔯🔯

                                                               

Comments

  1. super bro but enakku ithu pothathu next better ah thanga na research student. so i will seeing soon better to your presentation .

    ReplyDelete
  2. Nice Bro.கட்டிடக்கலை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக போடுங்கள்.

    ReplyDelete

Post a Comment