பிந்திய வேதகால நாகரிகம் (LATER VEDIC CIVILIZATION)
பிந்திய வேதகால மென்பது ரிக்வேத காலத்திற்கு பிற்பட்ட காலமாகும். கி.மு 1000 முதல் 600-ம் வருடம் வரையுள்ள காலம் பிந்தியவேத கால நாகரிக காலமாகும். சாமவேதம், பிராமணங்கள், ஆரணியங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள் ஆகியவை தோன்றிய காலமே பிந்திய வேதகாலம் ஆகும். இவைகளின் மூலம் இக்கால அரசியல், பொருளாதார, சமுதாய, சமய நிலைகளைப் பற்றி அறிய முடிகிறது. கி.மு. 1500 முதல் 1000 வரையில் ஆரியர்கள் சிந்து சமவெளியிலிருந்து கங்கைச் சமவெளிக்கு பரவினார்கள். அவர்களுடைய நாகரிகத்தைப் பற்றி இனிக் காணலாம்.
அரசியல் நிலை : Pilitical Condition
பரந்த சாம்ராஜ்யங்களைப் பற்றியும், கம்பீரமான நகரங்களைப் பற்றியும், பிந்திய வேதகால இலக்கியங்களில் முதல் தடவையாக காண்கிறோம். மன்னர்களின் அதிகாரம் வளர்ந்தது. மன்னர் தெய்வத் தன்மை மிக்கவராகக் கருதப்பட்டார்.மக்களை தன் விருப்பப்படி, ஆண்டு வந்தார். குடிமக்கள் அரசனுக்குத் திறை செலுத்தினர். படை நடத்தும் தளபதியாகவும், சட்டத்தின் காவலனாகவும், மக்களைப் பாதுகாக்கும்
தந்தையாகவும், பகைவர்களை வேரருக்கும் காவலனாகவும் விளங்கினார். வலிமைமிக்க மன்னர்கள் தங்களுக்கு ஏக்ராட், சாம்ராட், ஸ்வராட், ராஜவிஸ்வஜனன், ஏகாதன் ஆகிய விருதுகளைச் சூடிக் கொண்டனர்.
மன்னர்கள் தங்கள் கௌரவத்திற்கு ஏற்ப 'ராஜசூயம்' 'வாஜபேயம்' அசுவமேதம்' போன்ற பல யாகங்களைச் செய்து வந்தார்கள். மன்னர்கள் பொதுவாக சத்திரிய குலத்தைச் சார்ந்தவர்களாக இருந்து வந்தார்கள். வாரிசு உரிமைப்படி மன்னர்கள் பதவி ஏற்றனர்.
மன்னருக்குத் துணைபுரிய இரத்தினங்கள் எனப்பட்ட குழு இருந்தது. மேலும் பொக்கிஷதார், வரிவசூலிப்பவர், கட்டியக்காரன் அரண்மனை முதல்வன், பயண உதவயாளன், வேட்டை உதவியாளன் போன்ற புதிய அலுவலர்கள் பற்றி பிந்திய வேத இலக்கியங்களில் காண்கிறோம். சபா, சமிதி போன்ற மன்றங்கள் தொடர்ந்து இருந்து வந்தன.
மன்னரே தலைமை நீதிபதியாகச் செயல்பட்டார். பார்டீபனரைக் கொலை செய்தல், சுரா என்னும் மதுபானத்தை அருந்துதல், தங்கத்தைத் திருடுதல், அரசனுக்கு துரோகம் செய்தல் ஆகியவையே தலையாய குற்றங்களாகக் கருதப்பட்டன. இக்காலத்தில் ஒருவன் குற்றவாளியா இல்லையா என்று ஆராயும் முறையும் இருந்தது. தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. அபராதம் வசூல் செய்யப்படும் முறையும் இருந்தது. சூத்திரங்கள், ஜாதி, பால் பகுப்பை வைத்து அபராதம் பணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மன்னர் கடமை தவறும் போது அவரை பதவி விலக்கி விட்டு புதிய மன்னரைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்ததாகவும் அறியாலாம்.
சமுதாய நிலை : Social Condition
பிந்திய வேதகால சமுதாயத்தில் சாதிப்பிரிவுகள் கடினமாயின, | தொழில் அடிப்படையில் எழுந்த சாதி முறையானது மெதுவாகப் பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு மாறியது. பிராமணன் வேதம் ஓதவும், சத்திரியன் போர் புரியவும், வைசியன் வாணிகம் செய்யவும், சூத்திரர் ஏவல்புரியவும் என்ற விதி உறுதியாக்கப்பட்டது. இந்த நான்கு பிரிவினர்களுக்குகிடையே ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. தெய்வத்துக்கு அடுத்தபடியாக பிராமணர்கள் வைத்து கருதப்பட்டார்கள். தூய்மையின் சிகரமாகக் கருதப்பட்டனர் பிராமணர்கள். நாளடைவில் இந்த சாதி முறை இந்தியாவெங்கும் பரவியது.
பிந்திய வேதகாலத்தில் வீடு கட்டும் முறையிலும் ஆடை - அணிகலன்களிலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் இல்லை. பெண்கள் துன்பம் உண்டாக்கக் கூடியவர்கள் என்று கருதப்பட்டனர். பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. பாலிய விவாகம் நடைமுறையில் இருந்தது. பெண்கள் வீட்டிலேயே அடைபட்டு இருக்காமல், பல தொழிகளில் ஈடுபட்டனர். கல்வி கற்றனர்.
சமுதாய அமைப்பில் மட்டுமல்லாது, பழக்க வழக்கங்களிலும் பல மாறுதல் ஏற்பட்டன. மாமிச உணவை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். மரக்கறி உண்பவர்கள் உயர்வாக மதிக்கப்பட்டனர். மது அருந்தாதவர்களும் உயர்வாக மதிக்கப்பட்டனர்.
பொருளாதார நிலை : Economic Condition
கிராமங்களில் உழவுத் தொழில் சிறப்பாக நடைபெற்றது. கனமான இரும்பால் ஏர்கள் செய்யப்பட்டன. வயல்கட்கு நீர் பாய்ச்சவும் உழுவதற்கும் மாடுகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் தோல் பதனிடுதல், மீன் பிடித்தல், தச்சுத் தொழில், கூடை முடைதல் போன்ற தொழில்கள் இருந்தன. தொழிலாளர் வர்க்கங்கள் தோன்றின. வாணிபமும் விருத்தியடைந்தது. பண்டமாற்று முறையிலேயே வாணிபம் நடந்தது. வணிகர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து இருந்தனர். | பாபிலோனியாவுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கூறப்படுகிறது. கடல் பற்றிய அறிவு இவர்களிடம் மிகுந்து காணப்பட்டது.
மக்கள் நகரங்களைப் போன்ற வாழ்க்கை வசதிகளுடன் கிராமங்களில் வசித்து வந்தனர். பொதுவாக வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டன. பல அறைகள் கொண்டவைகளாகக் காணப்பட்டன. பல மாளிகைகளும் இருந்தன. உலோகங்களில், இரும்பு, தகரம், ஈயம், தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இரும்பால் பல தரப்பட்ட ஆணிகளும் ஆயுதங்களும் செய்யப்பட்டன.
சமயநிலை : Religious Condition
பிந்திய வேதகாலத்தில் ஆரியர்களின் சமயத்தில் குறிப்பிடத்தக்க பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. இந்திரன், சூரியன் போன்ற கடவுள்களுக்கு இருந்த மதிப்பு குறைந்து, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் உயர்ந்த இடத்தை அடைந்தனர். பலவித வழிபாட்டு முறைகளும், பலியிடும் முறையும் தோன்றியதால் மதம் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாதபடி சிக்கலாக தோன்றின. மரங்கள் ஆறுகள் போன்ற இயற்கை தன்மைகளை தொடர்ந்து வணங்கினர். கொடி தேவதைகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மந்திர சக்திகளை உருவாக்கினர்.
பிந்திய வேதகாலத்தில் வேள்விகளும் சடங்குகளும் பல்கிப், பெருகின. வேள்வி செய்தல் அரசனுக்குரியது. வேள்விகளின் பயன் அதிகமாகப் புகழப்பட்டன. வேள்வி நடத்தும் 'பிராமணர்கள் தனித்திறமையும் பயிற்சியும் பெற்றிருந்தார்கள். யாகத்தில் மிருகங்களைப் பலியிடுதல் இடம் பெற்றது பெற்றது.வேள்வி முறைகள் ஒரு கலயைாகவே மதிப்பு பெற்றது.
பிந்திய வேதகாலத்தில் பிறப்பு, இறப்பு, இறந்த பின்னர் தொடரும் வாழ்க்கை பற்றி சில முனிவர்கள் சிந்திக்க முற்பட்டனர். பூர்வகர்ம வினைகள் பற்றிய கொள்கைகளும் , அவற்றின் விளைவான மறு பிறப்பு பற்றிய கொள்கையும் இக்காலத்தில் தான் உருவாயின. மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகளும் சமுதாயத்தில் தலையெடுத்தன. துறவு நிலையை வேதகால மக்கள் மிகவும் போற்றினர். நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையையும், அவ்வாழ்க்கை அளிக்கின்ற இன்பத்தையும் முழுக்க உதறிவிட்டு, பற்றற்ற துறவி நிலையை ஏற்றுக் கொண்டவனால் தான் இன்பம் அளிக்கும் வீடுபேறு' அல்லது பிரம்மனை' அடையநிலையான இன்பம்முடியும் என்று நம்பினர்.
மேற்கண்டவைகளை நாம் நோக்கும் போது, பிந்திய வேத காலம், அரசியல். சமுதாய, பொருளாதார அடிப்படையில் ரிக்வேத கத்திலிருந்து ஓரளவு மாறுபட்டு இருக்கிறது என்பது தெளிவாகத்தெறிகிறது. நகர வாழ்க்கை முறையும், பல்வேறு அரசியல் அமைப்புகளின் தோற்றமும், வளர்ச்சியும் அம் மாறுதல்களில் மிக முக்கியமானவை களாகும்.
Comments
Post a Comment