கி.மு 6 ம் நூற்றாண்டில் வட இந்தியாவின் நிலை ; (CONDITION OF NORTH INDIA DURING SIXTH CENTURY B.C)

                          இந்திய வரலாறு 




கி.மு 6 ம்  நூற்றாண்டில் வட இந்தியாவின் நிலை ;

  (CONDITION OF NORTH INDIA DURING SIXTH CENTURY B.C)


                                                                                கி.மு. ஆறாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நூற்றாண்டாகும். இந்த நூற்றாண்டில் இந்தியா ஒரு நிலையான ஆட்சியல் ஒன்று பட்டு இருக்கவில்லை. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த அரசர்கள் தங்களது மேலாண்மையை நிலைநாட்டுவதற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். வட இந்திய அரசியல் நிலை கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு வரை குழப்பம் நிறைந்ததாகவே இருந்தது. ஆனால் இதே சமயத்தில் தான் இந்தியாவில் இரு பெரும் சமயங்களை தோற்றுவித்த மகாவீரரும் புத்தரும் தோன்றினார்கள்.
                                           
                                                                              இந்த நூற்றாண்டில் வட இந்திய நிலைமையைப் பற்றி நாம் , அறிந்து கொள்வதற்கு ஆதாரமான நூல்கள் சமய நூல்களான மகாவம்சம், தீபவம்சம், ஆகியனவும் புத்த நூல்களான பீடகங்களும் ஜாதகக் கதைகளும் ஆகும். புத்தரைப் பற்றியும், சமணரைப் பற்றியும் கூறுகின்ற அநேக நூல்களும், பர்குத், சாஞ்சி, அமராவதி போன்ற இடங்களில் கி.மு.
இரண்டாம் நூற்றாண்டில் செதுக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளும் கி.மு. - ஆறாம் நூற்றாண்டைப் பற்றி அறிய உதவுகின்றன. 


அரசியல் நிலைமை : Political Condition.



                                  கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இமயமலைக்கும், நர்மதை நதிக்கும் இடைப்பட்ட பகுதியில் பதினாறு பேரரசுகள் இருந்தன. இவைகள்: 'மகாஜனபதாக்கள்' என்று அழைக்கப்படுகிறது. இவையாவும் தற்காலத்தில் பீகார் மாநிலத்தையும், மத்தியப் பிரதேசத்தையும் உட்பட்ட நிலப்பரப்பில் இருந்தன. சில பேரரசுகளில் முடியாட்சியும், சிலவற்றில் குடியாட்சியும் நிலவியது. பதினாறு மகாஜனபதாக்கள் பின்வருமாறு :

        1. வங்கதேசம் :
                               இது தற்போது பகல்பூர் என்ற பகுதியைக் குறிக்கும் இதன் தலைநகர் 'சம்பா' ஆகும். பிம்பிசாரர் காலத்தில் இது மகத நாட்டுடன் இணைக்கப்பட்டது.
        2. மகதநாடு :
                                பதினாறு மகாஜனபதாக்களின் இது மிகவும் பெரியது ஆகும். இதன் சுற்றளவு முன்னூறு மைல் ஆகும். இதன் தலைநகரம் ராஜகிரகம். இதுவே பின்னர் பாடலிபுத்திரமானது. இந்த நாட்டை தோற்றுவித்தவர் பிரகத்திரதா என்பவர் ஆவார். 
                                        இந்த நாடு பிம்பிசாரா, அஜாதசத்ரு என்பவர்களுடைய காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கியது. தன் அருகில் இருந்த பல சிறு பகுதிகளை வென்று பலம் பொருந்தியதாக விளங்கியது மகதநாடு.

            3. கதசி :
                                              காசி தற்காலவாரனாசியைக் குறிக்கும். புத்தர் காலத்திற்கு முன்பு காசி ஒரு வலிமையுள்ள நாடாகத் திகழ்ந்தது. காசிக்கும் கோசலை நாட்டிற்கும் அடிக்கடி போர்கள் நடந்தன. ஹம்சா என்ற கோசலை அரசர் காலத்தில் காசி தோற்கடிக்கப்பட்டு கோசலை நாட்டுடன் இணைக்கப்பட்டது.
               4. கோசலம் :
                                             சோசலை நாடு தற்போது உத்திரபிரதேசத்திலுள்ள 'ஆவாத் என்ற பிரதேசத்தைக் குறிக்கும். இதன் தலைநகரமாக விளங்கியது 'சரஸ்வதி' ஆகும். புத்தர் காலத்தில் கோசலை நாட்டிற்கும் மகா நாட்டிற்கும் அடிக்கடி போர் ஏற்படுவதுண்டு. 
                                            அப்போது கோசலை நாட்டு மன்னராக இருந்தவர் பிரஜெயின்ஜித் என்பவராவார். இவர் ஒரு பெரி, கொடைவள்ளல். இரு முக்கிய பிராமணர்களுக்கு நகரங்களைத் தானமா வழங்கினார். அஜாத சத்ருவுக்கும் இவருக்கும் பகைமை ஏற்பட்டது, பிரஜெயின் காலத்திற்குப் பிறகு காசோலை மகத நாட்டுப் இணைக்கப்பட்டது

                                       5. வஜ்ஜி : வஜ்ஜி நாட்டில் லிச்சாவி' வம்சத்தினரும் 'வித்திலா', வம்சத்தினரும் பெயர் பெற்றவர்கள். ஜகை மன்னர் காலத்தில் வித்தியர்கள் , பெருமையடைந்தனர். லிச்சாவி வம்சத்தினரின் தலைநகரம் வைசாலி, மகாவீரரின் தாய் லிச்சாவி அரச குடும்பதைச் சேர்ந்தவர் ஆவார்.

                                      6. மல்லா : மல்லாநாட்டில் குடியாட்சி காணப்பட்டது. இவர்களின் தலை நகரம் குஸி ஆகும். குஸி நகரமும் பாவாவும் புத்த மார்க்கத்தில் புகழ் பெற்றவை. புத்தர் தனது இறுதி உணவை பாவா என்ற இடத்தில் உண்டு முடித்து முக்தியடைந்தார் என்று கூறப்படுகிறது.

                                      7. சேதி : தற்காலத்திய பந்தல்கன்ட் என்ற இடத்தைக் குறிக்கிறது. ' இது யமுனை நர்மதை நதிகளுக்கிடையே உள்ள பகுதியாகும். இதன் தலைநகரம் சுத்தமதி ஆகும்.

                                       8. வத்சா: இங்கு முடியாட்சி நிலவியது. இதன் தலைநகரம் ' கௌசாம்பி ஆகும். இதனை கி.மு. ஆறாம் நூற்றாண்டில் உதயனன் என்ற - மாமன்னர் ஆட்சிபுரிந்தார். இவரிடம் மிகப்பெரிய படை ஒன்று இருந்தது. இவர் முதலில் புத்த மதத்தின் கொடிய எதிரியாக இருந்தாலும் பிற்காலத்தில் புத்த மதத்தை ஆதரித்தார். -

                                         9. குருநாடு : தற்காலத்திய டெல்லி, மீரட் ஆகிய இடங்கள்தான் - அக்காலத்தில் குருநாடாக விளங்கியது. வேதகாலத்தில் குருநாடு சிறப்பு பெற்று விளங்கியது. ஆனால் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அதன் புகழ், மங்கியது.

                                         10. பாஞ்சாலம் : தற்போது உள்ள ரோகில் கண்ட்டைக் குறிக்கும் குருநாட்டைப் போன்றே இதுவும் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் அதன் சிறப்பை இழந்தது. இதன் தலைநகரம் கம்பில்லா ஆகும். 

                                         11. மத்சயநாடு: இது தற்போதயை ஜெய்ப்பூரைக் குறிக்கும். இதன் தலைநகரம் விராத் ஆகும்.

                                        12. சூரசேனநாடு : இது மத்சய் நாட்டின் தென்பகுதியில் அமைந்திருந்தது. இதன் தலைநகரம் மதுரா ஆகும்.

                                        13. அசாக்கா : அவந்தியின் அருகாமையில் அமைந்திருந்தது - அசாக்கா. இதன் தலைநகரம் பாட்லியா ஆகும்.

                                       14. அவந்தி : மாளவ நாட்டைக் குறிப்பிடுவது அவந்தியாகும். இதன் தலைநகர் உஜ்ஜயினி ஆகும். புத்தர் காலத்தில் அவந்தியை ஆண்டமன்னர் பிரதியோட்டா என்பவராவார். அவந்தி புத்தமத வளர்ச்சிக்கு ' முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.

                                       15. காந்தாரம் : தற்காலத்தில் காஷ்மீர், தட்சசீலம் போன்ற இடங்களே அக்காலத்தில் காந்தாரம் என்று அழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் தட்சசீலம் ஆகும். காந்தாரம் கல்வி வளர்சிக்குப் பெயர் பெற்ற இடமாகக் கருதப்படுகிறது.

                                      16. காம்போசா : இது துவாரகையைத் தலைநகராகக் கொண்ட இதன் தலைநகர் தொர்க்கா ஆகும். இந்த நாடு வடமேற்கு எல் புறத்தில் அமைந்திருந்தது. இதைப்பற்றி      யுவான்சுவாங் குறிப்பிட்டுள்ளார்.

        அரசன் (முடியாட்சி) : Monarchy



                                  மேற்கூறப்பட்ட நாடுகளில் அனேக மன்னர்கள் சத்திரிய  வம்சத்தைச் சேர்ந்தவர்களாகத் தெரிகிறது. ஆனால் சத்திரி, அல்லாதவர்களும் அரசர்களாக இருந்தனர். அரசன் பரம்பரையா, பட்டத்திற்கு வந்தான். அரசன் பல சலுகைகளைப் பெற்று எதேச்சா, ஆட்சி செலுத்தி வந்தான். நிலத்தின் விளைச்சலில் அரசனுக்கு பத்தில் பங்கு கொடுக்கப்பட்டது. 
                                   ஒரு அரசனுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அந்த  பிறப்பு நாள் பொது விழாவாகக் கொண்டாடப்படும். அப்போது குடிமக்கள் ஒவ்வொருவரும் அரசனுக்கு 'பால்பணம்' என்ற ஒரு சிறிய தொகையைக் கொடுப்பார்கள். அரசன் நீதிக்குத் தலைவனாகக் கருதப்பட்டான். 

                                       அவனிடம் பல அலுவலர்கள் இருந்தனர். பலவகைப்பட்ட நீதிமன்றங்கள் காணப்பட்டன. அரசனது தீர்ப்பே முடிவாகக் கருதப்பட்டது. அரசனிடம் நிலையான படை ஒன்று இருந்தது. அப்படை நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது. போர்களில் வில், அம்பு, ஈட்டி, வாள் போன்றவைகள் உபயோகிக்கப்பட்டன. யானைப்படை மீது அரசன் அதிக நம்பிக்கை வைத்திருந்தான்.  அரசனுக்கு வேட்டையாடும் வழக்கம் இருந்தது. 

         குடியாட்சி முறை: -                          


                              கி.மு. ஆறாம் நூற்றாண்டில் குடியாட்சி முறையும் சில நாடுகளில் காணப்பட்டது. உதாரணமாக வஜ்ஜி நாட்டைச் சொல்லலாம். குடியாட்சி முறையில் மக்கள் தாங்களாகவே நேரடியாக ஆட்சியை நடத்துவார்கள். எல்லோரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடுவார்கள். அந்த இடத்திற்குப் பொது இடம் அல்லது போதி அல்லது சங்கா என்று பெயர்.

                                       குடியாட்சி நடைபெற்ற நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நாடாளுநர் அல்லது இராஜன் என்று பெயர். உதாரணமாக லிச்சாவிநாடு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இராஜன்களால் ஆளப்பட்டது. ஆயினும் எதிர் தங்கள் நாட்டின் மீது போர் தொடுக்கும் போது எல்லாக் குடியாட்சிகளும் ஒன்று கூடி எதிரியைத் தாக்கும் அப்போழுது போர்த்தலைவனாக ஒரு பொதுத் தலைவனைத் எல்லாக் குடியாட்சிகளும் சேர்ந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.


  நாட்டின் வருமானம்: Income


\                                          நாட்டின் வருமானம் முக்கியமாக நிலவரி மூலம் கிடைத்தது . நிலவரி ஆறில் ஒரு பகுதியாகும். இதனைத் தவிற சிற்றரசர்கள் கொடுக்கு பணமும் அரசரது வருமானத்துடன் சேர்க்கப்பட்டது. வியாபாரிகள்  சிலர் வரிகளைச் செலுத்தினர். மக்கள் அரசனுக்கு நன்கொடை வழங்கினர். இப்படி சேர்ந்த பணம் படை, அரசாங்க அலுவல்கள், அரச குடும்பம், சமுதாய வளர்ச்சி ஆகியவைகட்கு உபயோகப்படுததப்பட்டன.

பொருளாதார நிலை : Economic Conditionn


                                            மக்கள் பலர் கிராமங்களில் வாழ்ந்துவந்தனர். விவசாயம் அவர்களின் முக்கிய தொழிலாகும். வீடுகள் நெருக்கமாக அமைந்திருந்தன. வீட்டைச் சுற்றியும் விவசாயம் நடைபெற்றது. நிலங்கள் சிறு சிறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வேலிகள் அமைக்கப்பட் டு பாதுகாக்கப் பட்டன. ஒரு கிராமத்தில் முப்பது முதல் ஆயிரம் வரை வீடுகள் இருந்தன.  குடும்பத்தில் தந்தையே தலைவன். குடும்பம் சிறப்பாகக் காணப்பட்டது. நிலவரி கிராமத்தலைவன் மூலமாக வகுக்கப்பட்டது. கிராமத்தில் ஒரு சபா  இருந்ததாகத் தெரிகிறது.
                                                   
                                                       கிராம வாழ்க்கை எளிமையாகவும், மகிழ்ச்சிகரமாகவும் காணப்பட்டது. குற்றங்கள் அதிகமாக இருந்ததாகத் தெரியவில்லை . கிராம் முன்னேற்றத்துக்கு மக்கள் மிகவும் ஒத்துழைத்தனர். கிராமங்களில் காடுகளும், புல்வெளிகளும் காணப்பட்டன. நீர்ப்பாசன வசதி இருந்தது. நெல் முக்கிய பயிராகவும் மற்றும் காய்கனிகள், பூக்கள், கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டன. மீன்பிடித்தல் வேட்டையாடுதல், பானை சட்டி செய்தல், மரம் ஏறுதல் ஆகிய தொழில்கள் நடைபெற்றன. வெளிநாடுகளுக்கு . . கம்பளி, பட்டு, வாசனைத் திரவியங்கள் அனுப்பப்பட்டன. பண்டமாற்று , முறை கைவிடப்பட்டு நாணயமுறைபழக்கத்தில் இருந்தது.


 சமுதாயநிலை : Social Condition 

                                                                   இந்திய சமுதாயமனது பல ஜாதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது. பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள். சூத்திரர்கள் என்ற பாகுபாடு காணப்பட்டது. சூத்திரர்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஜாதி வேற்றுமை சமுதாய முன்னேற்றைத் தடுத்தது. அவரர்கள் ஜாதிக்கேற்ற தொழில்களைச் செய்தனர். சமுதாயத்தில் அடிமைகள் இருந்தனர். சிலர் தவ வாழ்க்கையை மேற்கொண்டனர். பெண்களின் ' நிலை திருப்திகரமாக இல்லை . மணமாகாத சில பெண்கள் சந்தையில் விற்கப்பட்டதாக கிரேக்க எழுத்தாளர்கள் கூறுகின்றனர். உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

                                                         இக்காலத்தில் மாமிச உணவு மிகவும் குறைக்கப்பட்டது. சைவ . உணவு மிகவும் விரும்பப்பட்டது. பசுவதை நிறுத்தப்பட்டதாக அறிகிறோம். மக்கள் பருத்தி ஆடையையே விரும்பி அணிந்தனர். "செல்வந்தர்கள் பட்டாடை அணிந்தனர். பெண்கள் ஆபரணங்கள் அணிந்தனர்.


சமயநிலை : Religious Condition


                                  கி.மு ஆறாம் நூற்றாண்டில்தான் உலக 'மெ ஹெராளிட்டஸ், கன்பூசியஸ் ஆகியோர் வாழ்ந்து வந்தனர். இந்தியாவிலும்  சிறந்த மதங்கள் புத்தராலும், மகாவீரராலும் தோற்றுவிக்கப்படன. இந்த நூற்றாண்டில் இந்து மதக் கோட்பாடுகளான ஆத்மா அழியாதது. உயிர் கூடு விட்டு கூடு பாயும், கருமவினை தொடர்ந்து வரும் ஆகிய மூன்றும் நாடெங்கிலும் பரவி நின்றன. இந்த உயர்ந்த கொள்கையை  படித்தவர்களும், துறவிகளும் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.மற்றவர்கள்  உருவவழி பாட்டைத் தழுவி வந்த இந்து சமயத்தைப் பின்பற்றி வந்தனர். 'மேலும் ஜாதிகளுக்கேற்ற வழிபாட்டு முறையும் காணப்பட்டது . இத்தைகைய சூழ்நிலைகளில் தான் சமணமதமும் புத்தமதமும்  இந்தியாவில் தோன்றின.  



                                           💕💕💕💕💕நன்றி 💕💕💕💕💕
  

Comments