காவியங்களின் காலம் (EPIC AGE)
அறிமுகம் ;
அவைக்களை நாம் காண முடியாது. ஆனால் இவை இரண்டும் தேசிய 'இலக்கியங்களாகும். இந்தியர்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாக இவை அமைந்துள்ளது .
இராமாயணம் :
இராமாயணத்தைஉருவாக்கினார். துளசிதாசர் அக்பர் காலத்தில் வாழ்ந்தவர். பின்னர் 12. நூற்றாண்டில் சோழ மன்னரின் அவைக்களப் புலவரான கம். இராமாயணத்தை செந்தமிழ் இலக்கியமாக உருவாக்கினார். கற்பனை வளத்துடன் உருவாக்கப்பட்ட இராமாயணம் இந்தியர்கள் விரும் படிக்கும் இலக்கியமாக உயர்வு பெற்றது.
இராமாயணம் ஒரு பகுதிகளையும் 24.000 சுலோகங்களையும், கொண்டது. இராமாயணத்தில் மனிதர்களில் சிறந்தவனாக அரசர்களுக்கரசனாக, பண்பிலே தெய்வமாக கருதப்படுகின்ற மன்னன் இராமனாக விஷ்ணு உருவெடுத்தார். இராமனாக உருவெடுத்த விஷ்ணு இ. சக்தியாக விளங்கிய இலங்கேஸ்வரனை அழித்தார். இராமனின் குருவா. அமைந்த வசிஷ்ட முனிவர் ஒருவனுக்கு வேண்டிய அனைத்தையும் ராமனுக்கு கற்றுக் கொடுத்தார். அவர் போதித்த உண்மைகள் 'வாசிஷ்டம் என்றழைக்கப்படுகிறது
மகாபாரதம் ;
மகாபாரதத்தை அருளியவர் வியாச முனிவர் ஆவார். ஆனால் ஹாப்கின்ஸ் என்பவர். மகாபாரதத்தை ஒருவரால் மட்டும் இயற்றியிருக்க முடியாது. பல தலைமுறைகளின் தொகுப்பே என்று கூறுகிறார். எனினும் மகாபாரதம் பல மொழி பேசுவோராலும் விரும்பிப் படிக்கும் இலக்கியமாகும். மகாபாரதத்தை வில்லிபுத்தூராரும், பெருந்தேவனாரும் பைந்தமிழ் காவியமாக உருவாக்கினர். மகாபாரதம் ஒரு லட்சம் : சுலோகங்களைக் கொண்டது.
குருசேத்திரத்தை மையமாகக் கொண்டது மகாபாரதமாகும். குருசேத்திரத்தில் நடந்த பாரதப் போரில் ஆரிய அரசர்கள் பாண்டவர், கெளரவர் ஆகிய இருதரப்பாக நின்று போரிட்டனர். மகாபாரதத்திலேயே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுவது பகவத்கீதை ஆகும். அது இந்து சமயத்தின் கோட்பாடுகளையும், தத்துவ நம்பிக்கைகளையும் இது கூறுகிறது. 'தீயதை நல்லது வெல்லும்' என்ற கருத்தை அடிப்படையாகக் - கொண்டதே மகாபாரதம் ஆகும்.
அரசியல் நிலை
இராமாயணமும் மகாபாரதமும் அக்கால அரசியல், சமுதாய நிலைகளை விளக்குகிறது. கட்டுக்கதைகள் தங்குதடையின்றி சேர்க்கப்பட்ட போதிலும் பழங்கால இந்தியாவின் சமுதாய பண்பாட்டு சிறப்புகளை விரிவாக விளக்குகிறது.
' மன்னர் இறைவனின் வழித் தோன்றலாகக் கருதப்பட்டார். மன்னனி தெய்வீகத் தன்மை கொண்டவர். நோயுடையவர்களும், உடற் குறைபாடு உடையவர்களும் மன்னர் பதவிக்கு தகுதியற்றவர்கள். வேதங்களின் காலத்தில் பெண்கள் ஆட்சிபுரிய தகுதியற்றவர்கள்.
அக்காலத்தில் பெண்கள் எடுக்கப்படும் போது மன்னன் மக்களை கலந்து ஆலோசித்தான். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறிய மன்னனை பைத்தியம் பிடித்த நாயைக் கொல்வது போல் கொல்ல வேண்டும் என்பது விதியாகும்.
உன்னருக்கு உதவியாக நிர்வாகத்தில் பலர் பணி புரிந்தனர்.
நாட்டின் முக்கிய துறைகளின் தலைவர்களாக மந்திரிகள்பொறுப்பேற்றனர். அறிவாற்றல், அன்பு, அடக்கம், பொறுமை, வீரம். உறுதி, கடமை. ஆகிய இயல்புகளைக் கொண்டவர்களே மந்திரி பதவிக்குதகுதியானவர்.. தசரதன் இராமனை மன்னராக நியமிக்க முடிவு செய்த போது வசிட்டரும் எட்டு அமைச்சர்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. காவியங்களின் காலத்தில் தூதுவர்களைப் பற்றிய செய்திகளும் காணப்படுகிறது
மன்னரே நீதித்துறையின் தலைவராவார். பல சோதனைகள் நடத்தி குற்றம் கண்டு பிடிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது.அவரவர் குற்றங்களுக்கேற்ப தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை முறைகளில் அபராதம் வசூலிக்கும் முறை இருந்தது. தீயோரைத் தண்டித்து நல்லோரைப் பாதுகாப்பதையே மன்னர் கடமையாகக் கொண்டிருந்தார்.
இக்காலத்தில் படைத்தளபதி ஒருவர் படை முழுவதையும் கவனித்துக் கொண்டார். தரைப்படை, காலாட்படை, தேர்ப்படை, யானைப்படை ஆகிய நான்கு பிரிவுகள் இருந்தன.போரில் வாள், ஈட்டி, வில் முதலியன பயன் படுத்தப்பட்டன. போர்க்களத்தில் பாசத்திற்கும், பற்றிற்கும் இடமில்லை . போரில் இறப்பவர்கள் வீர சுவர்க்கம் எய்துவர் என்று நம்பப்பட்டது. போரில் விலங்குகளையும், குழந்தைகளையும், வயதானவர்களையும், பெண்களையும், பிராமணர்களையும் தாக்குவதில்லை என்ற விதி இருந்தது.
சமுதாயநிலை ;
காவியங்களின் காலத்தில் சாதி முறை நன்கு இறுகி விட்டன. ஆயினும் கலப்பு மணங்கள் நடைபெற்றன. திருமணத்தில் தெய்வீகத் தன்மை குறைந்தது. ஒருவனுக்கு பல மனைவியர் இருப்பதும், ஒரு பெண் பலருக்கு மனைவியாதலும் நடைமுறையில் சமூகம் ஏற்றது. சுயம் வரம் மூலம் பெண்கள் கணவன்மார்களைத் தேர்ந்தெடுத்தனர்.
பெண்களைப் பழித்தல், இழிவு செய்தல் சாதாரணமாகக் காணப்பட்டன. அடிமைகள் போல் பெண்கள் வாழ வேண்டுமென்று காவியங்கள் கூறுகின்றன. குழந்தைத் திருமணம், பெண்கள் உடன் கட்டை ஏறுதல் பழக்கம் ஆகியவை சமுதாயத்தில் காணப்பட்டது. விதவைப் பெண்ணின் மறுமணம் அங்கீகரிக்கப்படவில்லை .
உணவு முறையில் சைவ உணவே சிறப்பாகக் கருதப்பட்டது. ஹலால் உண்ணும் பழக்கமும் இருந்தது. இராமன் மாமிச உணவை உண்டான் என்று சான்றுகள் கூறுகின்றன. பசுக்கள் தெய்வீகம் தன்மையுடையனவாகக் கருதப்பட்டது. எனவே பசுவைக் கொன்ற தின்பது வரவர தடுக்கப்பட்டது.
காவியகால மக்கள் வண்ண வண்ண ஆடைகள் அணிந்தனர். பெண்கள் முக அணிகள் அணிந்ததாகத் தெரிய வருகிறது. பெண்கள் முக்காடு இடும் வழக்கமும் காணப்பட்டது. வயதானவர்களும் விதவைகளும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தனர். பொதுவாக பருத்தி ஆடைகளையே பலரும் அணிந்தனர். மேலும் மக்கள் தங்கம், வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட அணிகலன்களை விரும்பி அணிந்தனர். சத்திரியர்கள் தலைமுடி நீளமாக வளர்த்தனர். பிராமணர்கள் மொட்டை அடித்துக் கொண்டனர்.
சமுதாயத்தில் வீரமிக்க விளையாட்டுகள் காணப்பட்டன. மக்கள் வேதங்களையும் தருமசாத்திரங்களையும் கற்றனர். அவர்கள் பேசும் மொழி சமஸ்கிருதமாக இருந்தது. மேலும் அவர்கள் வான இயலும், சோதிடமும் கற்றனர். சமுதாயத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவை முக்கியத் தொழில்களாக இருந்தன.
பொருளாதாரநிலை ;
காவியங்களின் கால பொருளாதார நிலை சிறந்து விளங்கியது. வேளாண்மை முக்கியத் தொழிலாகக் கருதப்பட்டது. ஆடு மாடுகள் மேய்ப்பதுவும் சிறப்படைந்தது. கால்வாய்கள் வெட்டி நீர்ப்பாசனம் செய்யும் முறையை மக்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். வியாபாரிகள் தங்கள் தொழிலை காப்பாற்றிக் கொள்வதற்கும், விருத்தி செய்யவும் சங்கம் அமைத்தனர். ஒவ்வொரு பெரிய வீதிகளிலும் சங்கங்கள் இருந்தன.
உள்நாட்டு, வெளிநாட்டு வியாபாரம் செழிப்புற்று இருந்தது. நாணயப் பழக்கமும் நடைமுறையில் இருந்தது. பருத்தி நெசவு, பட்டு நெசவு, பின்னல்கலை, அச்சிடும் கலை ஆகிய தொழில்கள் காணப்பட்டன. பலதரப்பட்ட உலோகங்களும் பழக்கத்திலிருந்தன. நாட்டில் வரி | பொருளாக கொடுக்கப்பட்டது.
சமயநிலை ;
இக்காலத்தில் மக்கள் பிரம்மன், விஷ்ணு, சிவன் முதலிய கடவுள்கட்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அத்துடன் கணேசர், பார்வதி போன்ற கடவுள்களையும் சிறப்புடன் வணங்கினர். விஷ்ணுவின் பத்து அவதாரக் கொள்கை மக்களிடையே பரவியது. ராமனும், கிருஷ்ணனும் விஷ்ணுவின் அவதாரங்கள் என்ற கருத்து மக்களிடையே பரவியது.
பகவத்கீதை மதித்துப் போற்றப்பட்டது. முன்வினைப் பயன், மறுபிறவி போன்ற கொள்கைகளில் நம்பிக்கை ஏற்பட்டது. தற்கால இந்து சமயத்துக்குரிய அடித்தளத்தை காவியங்களின் காலம் அமைத்துக் கொடுத்தது. சமய விழிப்புக்கும் புதிய தத்துவங்கட்கும் வித்திடப்பட்டது
💗💗💗 நன்றி 💗💗💗
Comments
Post a Comment