INDIAN HISTORY
புத்த சமயம்;
கி. மு. ஆறாம் நூற்றாண்டு, இந்திய வரலாற்றில் மிக முக்கிமான காலமாகும். அது இந்தியாவில் சமய எழுச்சி ஏற்பட்ட காலமாகும். சீனாவில் கன்ஃபூசியசும், ஈரானில் சொராஸ்டிரரும், கிரீசில் பெர்மைசும், கிரேக்க அயோனிய தீவில் ஹொராக்கிளிடசும் புதிய தத்துவக் கருத்துக்களை வெளியிட்ட காலமாகும். இந்தியாவில் புத்தர், மகாவீரர்' ஆகியவர்கள் தோன்றி தங்கள் சமயக் கருத்துக்களை மக்களிடம் எளிய முறையில் போதித்து, புத்தசமயம், சமணசமயம் போன்ற புதிய சமயங்களைத் தோற்றுவித்தனர். இந்து சமயத்தில் இருந்த சில கண்மூடித்தனமான வழக்கங்களைக் களையத் தோன்றிய ஓர் சீர்திருத இயக்கமே புத்த சமயமும், சமண சமயமுமாகும்.
புதிய சமயங்கள் தோன்றக் காரணங்கள்:
1. இந்து சமயக் கருத்துக்களின் புரியாத தன்மை : -
இந்து சமுதாயத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கு, வேத மற்றும் சமயநெறி நூல்களில் கூறப்படும் சடங்குகளும், சம்பிரதயங்களும் அப்பாற்பட்டே இருந்தன. பிராமணர்களுக்கு மட்டுமே விளங்கக் கூடியதாக, சாதாரண மக்களால் புரிந்து கொள்ளமுடியாததாக இந்துமதம் காணப்பட்டது.ஆரிய இலக்கியங்கள் அனைத்தும், சமஸ்கிருத மொழியிலேயே இருந்ததால் அவை சாதாரண மக்களால் உணர முடியவில்லை .
Comments
Post a Comment